கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 16, 2012

அமீரக வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்கள் ஆலோசனை கூட்ட தீர்மானங்கள்!

14-12-12 அன்று துபாய் JT மர்கஸில் வைத்து அமீரக வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ இபுராஹீம் அவர்களின் மார்க்க உரையுடன் தொடங்கி, ஊரில் நடைபெற்ற மற்றும் நடைபெற இருக்கின்ற நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள் பற்றி பேசப்பட்டு.
கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

1)வட்டியில்லா கடன் திட்டம் கடையநல்லூரில் செயல்படுத்த நான்கு கிளைகளின்  நிர்வாகிகள் கூடி ஆலோசனை செய்து, நமது ஊரில் இத்திட்டத்தை செயபடுத்த பொருபளர்களை தேர்ந்தெடுத்து அமிர நிர்வாகத்திற்கு தெரிவிக்க கேட்டு கொள்வது

2) நமது தவ்ஹீத் கொள்கையை விட்டு விலகி, குறிப்பிட சிலரின் பெயரில் உள்ள டிரஸ்ட்டின் கீழ் இயங்கும் மதரசாவில் படிக்கும் நமது கொள்கை சகோதரிகளுக்கு சில இடையூறுகளை இவர்கள் ஏற்படுத்துவதால். அந்த சகோதரிகளுக்கு கல்வியை தொடரும் நோக்கில், முழு நேர மற்றும் பகுதி நேர பெண்கள் இஸ்லாமிய கல்லுரியை  கடையநல்லுரின் மைய பகுதியில் அமைப்பது அல்லது ரஹ்மானிய புரம் (மரியம் பள்ளி)கிளையில் உள்ள இஸ்லாமிய கல்லூரியை விரிவுபடுத்துதல், மேலும் அதற்கு தேவையான பொருளாதாரம் எவ்வளவு என்பதை நான்கு கிளை நிர்வாகிகள் ஆலோசனை செய்து அமீரக நிர்வாகத்திற்கு தெரிவிக்க  கேட்டு கொள்வது.


No comments: