கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 16, 2012

ஜித்தா வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்!


ஜித்தா வாழ் கடையநல்லூர் தவ்ஹீத்  கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் சகோ. அப்துல் பாசித் தலைமையில் (14.12.12) அன்று இனிதே நடைபெற்றது.

கூட்டத்தில கீழ்கண்ட விசயங்கள் ஆலோசிக்கப்பட்டது !


1. கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளின் பணிகள் பற்றிய நிலவரம் மற்றும் அனைத்து கிளைகளும் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள இருக்கிற பொருளாதார தேவைகள் பற்றிய விபரங்கள் சமீபத்தில் தாயகம் சென்று வந்த சகோ. அப்துல் பாசித் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
 
2. டவுன் கிளை மர்கஸ் இடம் வாங்கும் வகைக்கு அனுப்பட்ட தொகை குறித்து விவாதிக்கப்பட்டது ! மேலும் பேட்டை கிளையில் அமையவிருக்கும் மர்கஸிர்க்கு இடம் வாங்கும் வகைக்கு எப்படி சகோதரர்களை சந்தித்து பொருளாதாரத்தை திரட்டுவது என்பது  குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

3. மார்க்க விளக்கம் நிகழ்ச்சி மற்றும் தெருமுனை பிரச்சாரம் பெண்கள் பயான், பெண்கள் தர்பியா போன்ற நிகழ்ச்சிகள் இதுவரை நடத்தாத இடங்களில் நடத்த வேண்டும் மேலும் அப்படி ஏற்ப்படுத்தப்படுகிற நிகழ்ச்சிகளுக்கு பொருளாதார உதவிகளில் பங்கெடுப்பது. அதற்காக தனிநபர்களின் பங்களிப்பை கேட்டு பெற்று நமது கிளைகளுக்கு உரிய முறையில் அவை சென்றடைய செய்வது.

4. ஜித்தாவில் வாழும் இன்னும் எண்ணற்ற கடையநல்லூர்  தவ்ஹீத் சகோதரர்களை இனம்கண்டு நமதூரில் தவ்ஹீத் ஜமாஅத்  கிளைகளின் மூலம் நடத்தப்படுகிற  எண்ணற்ற செயல்பாடுகளை எடுத்துரைத்து அவர்களையும் அப்பணிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய தனிநபர் சந்திப்பு, குழு சந்திப்பு மூலம் எடுத்துரைப்பது.

5. தாயகத்திலிருந்து சவூதி வந்துள்ள சகோ. M.I. சுலைமான் அவர்கள் வருகிற 28.12.12 அன்று ஜித்தாவில் தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்துள்ள மார்க்க விளக்க நிகழ்சியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள் அதில் நமதூர் தவ்ஹீத் சகோதரர்களை அதிகமதிகம் பங்கெடுக்க செய்து பயன் பெற முயற்ச்சிகள் மேற்கொள்ளவும் முடிவு எடுக்கப்பட்டது.

6. டவுன் கிளை மர்கஸ் இடம் வாங்கும் வகைக்கு தங்களின் பொருளாதாரத்தை தந்து உதவிய சகோதரர்களுக்கு இந்த ஆலோசனை கூட்டத்தில் நன்றி சொல்லப்பட்டது !

இறுதியில் துவாவோடு இனிதே கூட்டம் நிறைவு பெற்றது.

No comments: