முதல் முறையாக கடையநல்லூரில் புரஜெக்ட்டர் மூலமாக தெருமுனை பிரச்சாரம்
தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏகத்துவ பிரச்சாரத்தை முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பிறமத மக்களிடம் இனிய மார்க்கம், எளியமார்க்கம், தெருமுனை பிரச்சாரம், நோட்டிஸ்கள் வழங்குதல், தொலைகாட்சி, இணையதளம், தனி நபர் சந்திப்பு, புரஜெக்ட்டர் மற்றும் தற்போது கைபேசியில் ரிங்டோன் என்று பல்வேறு வழிகளில் பிரச்சாரம் செய்து வருகிறது, அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை
பல்வேறு மாரக்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகின்றது. மார்க்க பணிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் நவீன ஊடகங்களை மாரக்க பணிகளில் புகுத்தி ஏகத்துவ பிரச்சாரத்தை பாமர மக்களுக்கும் எளிதாக புரிய வைக்க வேண்டும் என்று பேட்டை கிளை நிர்வாகிகள் ஆலோசனை செய்து வெளிநாட்டு சகோதரர்களிடம் தமது எண்ணங்களை பகிர்ந்து அவர்களிடம் இதற்கான உதவி கேட்கப்பட்டது. அந்த அடிப்படையில் பேட்டையை சார்ந்த அமீரகத்தில் வாழும் ஒரு சகோதரர் பேட்டை கிளைக்காக sony projector ஒன்றை சில தினங்களுக்கு முன்பு பேட்டை கிளை நிர்வாகத்திற்கு அனுப்பி தந்தார்.
அதன்பின்பு அதற்கான ஸ்கிரின் போன்றவற்றை தயார் செய்து முதல் முறையாக சோதனை ஓட்டமாக அல்லாஹ்வின் கிருபையால் நேற்று இஷா தொழுகைக்கு பிறகு சகோதரர் அப்துல் ரஹ்மான் பிர்தொளஸி அவர்கள் "மவ்லீது" என்ற தலைப்பில் உரையாற்றிய சீடி sony projector மூலம் அகன்ற திரையில் பேட்டை புளியமுக்குத் தெருவில் போட்டு காட்டப்பட்டது. சோதனை முயற்சி என்பதால் நாம் யாரையும் அழைக்கவில்லை இருப்பினும் பொது மக்கள் குறிப்பாக அதிகமான பெண்கள் திரளாக வந்து இருந்து நிகழ்ச்சியை பார்த்து பயன் அடைந்தனர். பேட்டை கிளையின் இந்த புதிய முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்(6:160)
தமது செல்வங்களை அல்லாஹ் வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.(2:261)

No comments:
Post a Comment