கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளையின் சார்பில் காயிதே மில்லத் திடலில் 20.01.2013 அன்று விழாழக்கிழமை இரவு 6.30 மணிமுதல் இரவு 10.00 மணிவரை இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு கிளை தலைவர் அயூப் கான் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாவட்ட துணை செயலாளார் சுலைமான் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் அமீன்,அப்பாஸ், ஜாகீர், முன்னிலை வகித்தனர். இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துன் நாசர் அவர்கள் "குற்றச்சாட்டுகளும், பதில்களும்" என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார்கள் அதை தொடர்ந்து,
மாநில தணிக்கைகுழு உறுப்பினர் K.S. அப்துல் ரஹ்மான் பிரதொளஸி அவர்கள் "புகழுக்குரிய நபிகள் நாயகம் (ஸல்)" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இறுதியில் கிளை செயலாளர் M.M. ஹாஜா முகைதீன் அவர்கள் நன்றிவுரை நல்கினார்கள்.
இறுதியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட முஸ்லீம்கள் திருக்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது
2. மார்கத்திற்கு முரணான சமாதி வழிபாடு, மொளலீது, வட்டி, வரதடசணை உள்ளிட்ட பாவங்களில் இருந்து முஸ்லிம்கள் விலக வேண்டும் என்றும். இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
3. முஸ்லீம்களை பயங்கரவாதிகளாகவும், திருக்குர்ஆனை தீவிரவாதிகளின் கையேடாகவும் சித்தரித்து, திரைக்கதை எழுதி நடித்து வெளியிடப்பட இருக்கும் நடிகர் கமலஹாசனின் விஸ்பரூபம் திரைபடத்திற்கு இடைக்கால தடைவிதித்த தமிழக அரசுக்கு இக் கூட்டம் நன்றி பாரட்டுவதுடன் நிரந்தரமாக இத் திரைப்படத்தை தடை செய்யவேண்டும் என்றும் இதையும் மீறி இத் திரைப்படம் திரையிடப்படுமானால் தமிழகத்தில் எங்கும் இத்திரைபடம் ஒடாத நிலை ஏற்படும் என இப் பொதுக்கூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
4. நாட்டில் தலைவிரித்தாடும் பல்வேறு குற்றச் செயல்களுக்கு முத்தாய்ப்பாக விளங்கும் மதுவின் மூலம் தமிழக அரசுக்கு பல கோடி வருவாய் கிடைப்பதன் மூலம் பல குடும்பங்கள் சீரழிவை சந்திக்கின்றன. அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை கவனத்தில் கொள்ளாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
5. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் நிலையை மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட தீண்டாமை வன் கொடுமை தடுப்புச் சட்டம். தற்போது பழி வாங்கும் நடவடிக்கைகளுக்காக பொய்ப் புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுவதால், மத்திய அரசு இந்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற இப்பொதுக்கூட்டம் வலியுறுத்துகிறது.
6. கடந்த தி.மு.க. ஆட்சியில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 % இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது அறிவித்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முஸ்லீம்களுக்கு 7 % இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று இப்பொதுக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
7. கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வைப்புத் தொகையாக 2000,4000,6000 ரூபாய் என எவ்வித முன்னறிக்கையும் இல்லாமல் வரிவசூல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு சமூக அமைப்புகளின் எதிர்ப்புக்கும் மத்தியில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வசூலை நகராட்சி நிர்வாகம் நிறுத்துவதோடு, நகராட்சிக்கு வருமானம் ஈட்டி தர வேறு நல்ல திட்டங்களை ஏற்படுத்தும்மாறு இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது
8. கடையநல்லூர் இக்பால் நகர்க்கு அருகில் உள்ள ஃபத்திமா நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அருகில், நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகளில் எடுத்து வரப்பட்டு கொட்டப்பட்டு மலை போல் காட்சியளிக்கின்றது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர்மன்ற நிர்வாகத்திற்கு எடுத்துச் சொல்லியும், இதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களுக்கு இடையூராக நகர்மன்றத்தால் அங்கு குப்பைகள் கொட்டப்பட்டால் பொதுமக்களை திரட்டி போராட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தயங்காது என்பதை நகராட்சி சுகாதார துறைக்கு இப்பொதுக்கூட்டம் எச்சரிக்கிறது.
9. இலங்கை பெண் ரிசானாவிற்க்கு சவுதி அரேபியாவில் வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து, இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் பிற்போக்கானவை என்று கருத்து தெரிவித்த நக்கீரன், ஆனந்த விகடன் இலக்கியவாதி மனுஷ்ய புத்திரன், நெல்லை எக்ஸேவியர் கல்லூரியின் துணை பேராசிரியர் ஜோஸபின் பாபா, மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர், தங்கள் கருத்தில் உறுதியாக இருப்பதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விவாத அழைப்பை ஏற்று இவ் விஷயத்தை பற்றி விவாதிக்க முன் வர வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
10. செங்கோட்டையில் இருந்து சென்ணை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் கடையநல்லூர் இரண்டாவது நடைமேடையில் நிறுத்தபடுவதால், பயணிகள் இரயிலில் ஏறுவதற்க்கு சிரமப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, முதலாவது நடைமேடையில் இரயிலை நிறுத்துவதற்கு இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
No comments:
Post a Comment