கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 26, 2013

ரியாத்தில் ஆலோசனைக் கூட்டம்!

ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத (TNTJ) சகோதர்களின் நிர்வாக ஆலோசனை கூட்டம்  24-1-13 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு சேவனல்லி ஜாகிர் அவர்கள் தலமையில் நடைபெற்றது. ஆலோசனைக்கு பிறகு

இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.



1. டவுண் கிளையின் தெருமுனை பிரச்சார வகைக்கு ஆம்ப்ளிபேர் மற்றும் ஸ்பீக்கர் எடுத்து கொடுக்கும் வகைக்கு முழு செலவையும் ஏற்று கொள்வது.

2. கிளைகளின் வரவு செலவு கணக்குகளை மாதம் மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கடையநல்லூரில் உள்ள அனைத்து கிளைகளும் நமது (ரியாத்) நிர்வாகத்திற்கு அனுப்பி தரவேண்டும் என்று கேட்டுகொள்வது.

3. கிளைகளில் நடைபெறும் தாவா பணிகளை மாதம் மாதம் வெளிநாட்டு சகோதர்கள் நிர்வாகத்திற்கு அனுப்பி தரவேண்டும் என்று கிளைகளை கேட்டு கொள்கிறது.

4. கிளைகளுக்கு தேவைபடும் பொருளாதாரா உதவிகள் கடிதம் மூலம் மட்டும் தந்தால் மட்டுமே உதவிகள் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

5. பேட்டை கிளையின் புதிய மர்க்கஸிற்கு இடம் வாங்கும் வகைக்கு  பொருளாத உதவி செய்ய களம் கண்டு வசூல் செய்வது.

இறுதியில் துவாஉடன் அமர்வு நிறைவு பெற்றது 

No comments: