பாலியல் வன்முறைகளை தடுக்க அனைத்து பெண்களும் முஸ்லிம் பெண்களை போன்று சுய கட்டுப்பாட்டுடன் ஆடைகளை அணிய வேண்டும் என்ற மதுரை ஆதினத்தின் கருத்து குறித்து புதிய தலைமுறை
இணையதளம் கடந்த டிச 30 அன்று கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 82 சதவிகிதத்தினர் மதுரை ஆதினத்தின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அல்ஹம்மதுலில்லாஹ்.
இஸ்லாமிய சட்டம் தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பதையும், இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது என்பதற்கு பெண்ணியம் பேசியவர்கள் எந்த ஹிஜாப்பை ஆயுதமாக எடுத்தார்ளோ அந்த ஹிஜாப் பெண்களை அடிமைப்படுத்துவதற்கு அல்ல அவர்களை ஆண்களின் வக்கிர எண்ணங்களிலிருந்து பாதுகாப்பதற்கு தான் என்பதை இன்றைக்கு உலகம் ஒத்துக் கொண்டுள்ளது. எல்லாபுகழும் இறைவனுக்கே…
"தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்". (24:31)
நன்றி : www.tntj.net
No comments:
Post a Comment