கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Mar 7, 2013

டிஎன்டிஜேவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் முகவரி

   இன்றைய கால சூழ்நிலையில் ஃபேஸ் புக் என்பது அனைவரும் தங்களது கருத்துக்களை இணையதளத்தின் வாயிலாக பகிர்ந்து கொள்ளக்கூடிய வழிகளில் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது. இதை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமையின் ஒப்புதலுடன் ஃபேஸ் புக்கில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுக்கு



தனித்தனியே அக்கவுண்ட்கள் திறக்கப்பட்டு அதன் வாயிலாக பிரச்சாரப்பணி வீரியமாக சென்றடைந்து வருகின்றது.

பக்கங்களின் முகவரி:

தமிழ் பக்கம்:

www.fb.com/thouheedjamath

ஆங்கில பக்கம்:

www.fb.com/thawhidjamath

மேற்கண்ட இரண்டு முகவரிகள் மட்டும்தான் மாநிலத்தலைமையின் அங்கீகாரம் பெற்ற முகநூல் பக்கங்கள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 இந்த பக்கங்கள் துவங்கப்பட்ட குறுகிய காலத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். குறுகிய காலத்தில் இத்தனை ஆயிரம் உறுப்பினர்கள் டிஎன்டிஜேவின் இந்த ஃபேஸ் புக் பக்கத்தில் இணைந்துள்ளது டிஎன்டிஜே வழங்கும் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மக்களுக்கு எந்த அளவு உள்ளது என்பதை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

காலச்சூழலுக்கு ஏற்ற பல பதிவுகள் மிகுந்த வரவேற்பையும் பெற்றது.

அதே நேரத்தில் சகோதரர் பீஜே அவர்களின் பெயரிலும் ஜமாஅத் பெயரிலும் பலர் முகநூலில் பக்கங்களை நிர்வகிக்கின்றனர். அவை அதிகாரப்பூர்வமானது அல்ல என்பதையும், மேற்கண்ட இவ்விரண்டை தவிர டி.என்.டி.ஜே.விற்கோ அல்லது பீஜே அவர்களுக்கோ எந்த பக்கங்களும் முகநூலில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 நன்றி : www.onlinepj.com

No comments: