தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளையின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் 03.03.2013 அன்று ஒறுங்கிணைப்பாளர் அச்சன்புதூர் சகோ.சுலைமான் அவர்கள் ஒப்புதலின் பேரில் ரஹ்மானியாபுரம் கிளைத்தலைவர் சகோ.அல்அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் துபை மண்டல தலைவர் சகோ.முஹம்மதலி அவர்கள் "நபிவழியில் நிர்வாகம்" என்ற தலைப்பில் சிறிய உரையாற்றினார்.
தீர்மானங்கள்.
1. மரியம் பள்ளிவாசலில் தொழுகைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி பல வருடங்களாக இடப்பற்றாக் குறையால் சிரமப்பட்டு வருவதால் அந்த இடநெறுக்கடியை சரிசெய்ய ஆலோசிக்கப்பட்டது.
2. மரியம் பள்ளியை மையமாக வைத்து இயங்கும் ரஹ்மானியா பெண்கள் அரபிக் கல்லூரியின் இடமாற்றம் மற்றும் கல்வித் தரம் மேம்பட ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில் வளைகுடா மண்டங்களான அமீரகம், ஜித்தா, புரைதா நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்தினை பதிவு செய்தார்கள். துஆவுடன் நிறைவுற்றது.
No comments:
Post a Comment