கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 3, 2013

ரஹ்மானியாபுரம் கிளை : சுவர்களில் மார்க்க வசனங்கள்!

       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக பல்வேறு மார்க்க பணிகளை செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாதை ஓரங்களில், மக்களின்  பார்வையில் படக்கூடிய வீடுகளின் சுவர்களில்   வீட்டாரின்  அனுமதி பெற்று  சுவர்களில் இஸ்லாமிய


மார்க்கம் சம்பந்தப்பட்ட குர்ஆன், ஹதிஸ் வசனங்கள் எழுதி அதன் மூலம்  மக்களிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றது.



     இந்த வகைக்காக ஜித்தாவில் வாழும் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதர்கள் வழங்கிய நிதியில் இருந்து தற்போது எழுதப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற சுவர்கள் மூலமாக செய்யப்படும் பிரச்சாரம் என்பது சுவரில் இருந்து இந்த வசனங்கள் அழியும் வரை அந்த சுவர் ஒரு பிரச்சாரராக (தாய்யி) இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

     இன்னும் அதிகாமான சுவர்களில் இது போன்ற மார்க்க விழிப்புணர்வு செய்திகள் எழுத கிளை நிர்வாகம் பொருளாதரத்தை எதிர்பார்த்த வண்ணமாக உள்ளது.

இத்தகைய பிரச்சாரத்திற்கு உதவி செய்யவிரும்பும் சகோதர்கள் கிளை நிர்வாகத்தை தொடர்பு கொள்ளமாறு கேட்டு கொள்கிறது.

தொடர்புக்கு : 00919942470256, 00919976122408, 00917200000477

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை. 
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.(புகாரி 6012)


குறிப்பு: இந்த வைக்காக பெறப்படும் நிதி இதற்காக மட்டுமே இன்ஷா அல்லாஹ் செலவழிக்கபடும். 

No comments: