கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 7, 2013

மக்கா நகர் : யான்பு சகோதர்கள் நிதி உதவி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளையின் மர்க்கஸ் தற்போது ஒரு சகோதரரின் இடத்தில் தொழுகை மற்றும் இன்னபிற மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணாபுரம் மலம்பாட்டை  தெருவில் மக்கா நகர் பகுதிக்கு என்று ஒரு சகோதரர்



த த ஜமாத்திற்கு வழங்கிய இடத்தில் கட்டப்பட்டு  உள்ள  மர்க்கஸ்ஸின் ஒரு சில கட்டுமான பணிகள் மற்றும் அதன் சுற்று சுவர்கள், அதாவது பள்ளியை அடுத்து இந்து சகோதர்களின் மயான(சுடுகாடு) இடம் இருப்பதால் சுற்று சுவர் கட்டுவது அவசியமான ஒன்றாக உள்ளது.


      இத்தகையை பராமரிப்பு பணிகளை நிறைவு செய்து பள்ளியில் தொழுகை ஆரம்பிக்கும் முயற்சியில் கிளை நிர்வாகம் இறங்கியுள்ளது.  இந்த வகைக்காக  தமிழ்நாடு தவ்ஹீத் மக்கா நகர் கிளை சார்பாக நிதி ஆதாரம் திரட்டப்பட்டு வருகிறது.  

     இதற்க்காக த.த.ஜமாஅத் சவூதி அரேபியா ஜித்தா மண்டல  யான்பு பகுதியை சார்ந்த கடையநல்லூர் சகோதரர்கள்  வழங்கிய   7355 (எழாய்யிரத்தி முன்னூற்றி ஐம்பத்தி ஐந்து)  ரியாலை ஜித்தா மண்டல செயலாளர் சகோ, அப்துல்  பாரி அவர்களிடம் கடையநல்லூர் கூட்டமைப்பு பொறுப்பாளர் வழங்கினார்.

இந்த உதவி கொண்டு தற்போது பணிகளும் நடைபெற்று வருகிறது. 




No comments: