கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 15, 2013

TNTJ மாநில பொதுக்குழு ! புதிய நிர்வாகம் !


     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14வது மாநிலப் பொதுக்குழு 14.04.2013 ஞாயிறன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்திலுள்ள மகாமகம் கலையரங்கத்தில் காலை 10.30மணிக்கு கூடியது.



     துவக்கமாக மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பில் சிறிய உரையுடன் மாநில நிர்வாகம் குறித்த மேலாண்மைக் குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து தணிக்கைக்குழு சார்பாக மாநிலத் தணிக்கைக்குழு உறுப்பினர் தவ்ஃபீக் அவர்கள் தணிக்கைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.






     அதைத் தொடர்ந்து மாநிலப் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தரணியெங்கும் தாவா பணிகள் என்ற தலைப்பில் கடந்த ஓராண்டுகளில் செய்யப்பட்ட தாவா பணிகளை தொகுத்து பட்டியலிட்டு ஆண்டறிக்கையை வாசித்தார்.மாநிலச் செயலாளர் யூசுப் அவர்கள் பொதுசேவையிலும், போராட்டத்திலும் டிஎன்டிஜே கடந்த ஓராண்டுகளாக ஆற்றிய பணிகளை ஆண்டறிக்கையாக சமர்ப்பித்தார்.

     மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம் அவர்கள் ஊடகங்களிலும், விவாதங்களிலும் தவ்ஹீத் எழுச்சி என்ற தலைப்பில் கடந்த ஓராண்டுகளில் ஊடகங்களில் தவ்ஹீத் ஜமாஅத்தின் எழுச்சியையும், டிஎன்டிஜே சந்தித்த விவாதங்களையும், ஏகத்துவ எதிரிகளிளை ஓடவிட்டு, அல்லாஹ் நமக்கு அளித்த வெற்றியையும் பட்டியலிட்டு ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.



     அதைத் தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு தாவா பணிகள் மற்றும் இரத்ததானத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவட்டம் மற்றும் கிளைகள், மண்டலங்கள் மற்றும் மண்டலங்களின் கிளைகள் ஆகியவற்றிற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


     இந்த நிர்வாகத்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவதைத் தொடர்ந்து சில நிர்வாக வசதிகளுக்காக சில மாதங்களுக்கு முன்பே நிர்வாகத்தேர்தல் வைப்பதற்கு உயர்நிலைக்குழு முடிவு செய்ததையடுத்து நிர்வாகத் தேர்தல் இப்பொதுக்குழுவில் நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் :

மாநிலத் தலைவர் : பீஜே
மாநிலப் பொதுச் செயலாளர் : ரஹ்மத்துல்லாஹ்
மாநிலப் பொருளாளர் : எம்.ஐ.சுலைமான்
மாநில துணைத் தலைவர் : சையது இப்ராஹீம்
மாநில துணைப் பொதுச் செயலாளர் : முஹம்மது யூசுப்

மாநிலச் செயலாளர்கள் :

1.எக்மோர் சாதிக்
2.கோவை ரஹீம்
3.அப்துல் ஜப்பார்
4.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி
5. தொண்டி சிராஜ்தீன்
6.ஆவடி இப்ராஹீம்
7.இ.முஹம்மது
8.பத்ருல் ஆலம்
9. நெல்லை யூசுப் அலி
10.திருவாரூர் அப்துர்ரஹ்மான்
நிர்வாகத் தேர்தலையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :

No comments: