கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 1, 2013

டவுண் கிளை :சிறையிலும் தொடர்ந்த அழைப்புபணி!

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை மர்க்கஸில் 29-4-13 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சகோ முஹம்மத் தாஹா MISC அவர்கள் "சிறையிலும் தொடர்ந்த அழைப்புப்பணி" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

  

     இதில் எந்த ஏகத்துவ கொள்கையை நிலைநாட்ட அதுவும் அல்லாஹ்வின்

பள்ளியை இடிக்க வந்தவர்களை விட்டு இறையில்லத்தை பாதுகாத்ததற்காக  கொள்கை இல்லாதவர்களின் பொய் புகாரால் பொய் வழக்கு போட்டு சிறைசாலை சென்றாலும் அங்கும் இந்த ஏகத்துவத்தை சொல்லுவோம் என்ற உறுதியுடன் பாளை மத்திய சிறையில் ஏறத்தாளா 40க்கும் அதிகமான பிறமத சகோதர்களிடம் ஓரிறை கொள்கையை சொன்ன விதத்தை மக்களுக்கு விளக்கினார்.

     இந்த சிறைசாலை பிரச்சாரத்தால் அந்த சிறைசாலையில் உள்ள சில பிறமத  சகோதர்கள் இஸ்லாத்தை எற்றுகொள்ள தயாராக உள்ளதாகவும் விளக்கினார்.அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்

      இதில் ஏராளமான சகோதர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டை செய்து இருந்தனர் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்

     ஓர் ஏகத்துவவாதி   சிறைசாலை சென்றாலும் அங்கும் கொள்கையை சொல்லுவான் என்பது யூசுப் நபியின் வரலாறு.

'என் சிறைத் தோழர்களே! ஏராளமான கடவுள்கள் (இருப்பது) சிறந்ததா? அடக்கியாளும் ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வா?'(12: 39)

 'அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர் கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது' என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.'  (12:40)

No comments: