கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 29, 2013

பேட்டை கிளை : புதிய நிர்வாகிகள் தேர்வு !

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை  செய்து வருகின்றது இந்நிலையில் இப் பணிகளை இன்னும் அதிகப்படுத்தி மக்கள் சேவை செய்திட பேட்டை 
கிளை நிர்வாகிகள் முடிவு செய்தனர்.தற்போதையே நிர்வாகிகள் துணை தலைவர், செயலாளர், பொருளாளர ஆகியோர் சொந்த வேலை நிமித்தம் காரணமாக அதிகமான நாட்கள்  வெளியூரியில் இருப்பதால் தங்களால் பெற்றுக் கொண்ட பணியை சரிவர நிறைவேற்ற முடியவில்லை அதன் காரணத்தால் தங்களை விடுவித்து அதற்கு தகுதியான உள்ளூரில் உள்ள சகோதரர்களை நியமிக்க கேட்டு கொண்டதின் அடிப்படையில்.

      26.05.2013 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு பேட்டை கிளையின் ஒருங்கிணைப்பு அமர்வு கிளை தலைவர் சகோ. அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் சகோதரர் செங்கோட்டை பைசல் முன்னிலையில் நடைபெற்றது. 


    இதில் மாநில பேச்சாளர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ. தாஹா அவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தின் அவசியம் குறித்து பேசினார்கள் அதன் பிறகு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது, எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக சகோதரர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தார்கள் 


     மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு மாவட்ட செயலாளர் சகோதரர் செங்கோட்டை பைசல் அவர்கள் தலைமையில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் கிளை உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தோர்வு செய்தனர்.


அதன்படி 


செயலாளர்ராக   -  சகோதரர் நிரஞ்சர் ஒலி அவர்களும், 


பொருளராக         - சகோதரர் அவ்வாபிள்ளை மைதீன்,


துணை தலைவர்ராக -  M.K. ஷேக் அலி 


ஆகியோர்  உறுப்பினர்களால் தேர்தேடுக்கபட்டனர் 


அதன்பிறகு மாவட்ட செயலாளர் செங்கோட்டை பைசல் அவர்கள் "நிர்வாகிகளின் பண்புகள்" என்ற தலைப்பில் சிற்ப்புரையாற்றினார் இறுதியில் தூவாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.


No comments: