கடையநல்லூரில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளையும் அரவிந்த் கண் மருத்துவமனை ஆரம்ப கண்
பரிசோதனை மையமும் இணைந்து நடத்திய சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை
பரிசோதனை மற்றும் அனைத்து வயதினருக்கான இலவச கண் சிகிச்சை முகாம் 30.06.2013 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு தொடங்கி மதியம் 2:00 மணி வரை கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில்
தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை தலைவர் அய்யூப்கான் அவர்கள் தலைமை தாங்கினார்,
மாவட்ட துணை செயலாளர் தாஹா மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கண் மருத்துவ முகாமை
கடையநல்லூர் காவல் துறை ஆய்வாளர் திரு. P.சபாபதி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அரவிந்த் கண் மருத்துவமணை கண் விழி திரை பரிசோதகர் சையது மைதீன் MS அவர்கள் தலைமையில்
அரவிந்த் கண் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 347 நபர்களுக்கு கண் பரிசோதனை
செய்தனர். இதில் 32 நபர்களுக்கு கண்பார்வை இழப்பு கண்டுபிடிக்கப்பட்டு அறுவைச்
சிகிச்சைக்காக நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இவர்களுக்கு மதிய உணவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை ஏற்பாடு
செய்திருந்தது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை
செயலாளர் காஜாமைதீன், பொருளாளர் ஜலால், மருத்துவ அணி செயலாளர் சாகுல் ஹமீது, மற்றும் தொண்டரணினர் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை
சிறப்பாக செய்திருந்தனர்.ரஹ்மானியாபுரம் ,பேட்டை, மக்கா நகர் ஆகிய கிளைகளின் சகோதர்களும் ஒத்துழைப்பு நல்கினர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.



















No comments:
Post a Comment