கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 22, 2013

ரஹ்மானியபுரம் கிளை: மருத்துவ உதவி!

      10-6-2013 அன்று TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக டெங்கு காய்ச்சலால் பதிக்கப்பட்ட சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4915 அவரின்


குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது. இதனை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

     இது போன்று ஏரளாமான மருத்தவ மற்றும் கல்வி உதவிகள் கேட்டு கடையநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அதிகமானோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளிடம் கோரிக்கை வைக்கின்றனர். இத்தகைய கோரிக்கைகள் ஆய்வு செய்து முடிந்த அளவு உதவிகளை கிளை நிர்வாகங்கள் செய்து வருகிறது.

     ஆகையால் உங்களின் ஜகாத் மற்றும் தர்மங்களை கிளைகளுக்கு கொடுத்து உதவுமாறு கிளை நிர்வாகங்கள் கேட்டு கொள்கின்றது. இத்தகைய பொருளாதரம் இந்தவகை உதவிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதை  தெரிவித்து கொள்கிறது.

 "உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.(2:177)

No comments: