கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 18, 2013

டவுண் கிளை: கடையநல்லூர் நகராட்சியை கண்டித்து பேனர்!

     கடையநல்லூர் இக்பால் நகர் அருகில் கிழக்கே நோக்கி ஓட வேண்டிய தண்டக்காரன் ஓடை தற்போது சாக்கடை போக்கிடம் இல்லாமல் தற்போது மேற்கே நோக்கி  செல்கிறது இதனால் சாக்கடை ஓரே இடத்தில் தேங்கி 



இருப்பதால் அதன் விளைவாக அப்பகுதியில் வாந்தி,பேதி,டெங்கு,வைரஸ் காய்ச்சல்,மர்ம காய்ச்சல் போன்ற கொடும் நோய்கள் பரவி சுகாதார சீர்கேடுகள்  தொடங்கிவிட்டது. 

     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் டவுண் கிளை சார்பில்  இது விசயமாக பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த விசயத்தை பொதுமக்கள் பார்வைக்கும் தமிழக  அரசின் பார்வைக்கு தெரியப்படத்தும் விதமாக இன்று காலை 18.07.2013 நகராட்சி அலுவலகம் முன்பும்,மணிக்கூண்டு அருகிலும் நகராட்சிக்கு எதிராக  பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

     ஒவ்வொரு நகராட்சி கூட்டத் தொடரிலும் லஞ்சம் வாங்குவதில் போட்ட போட்டி போடும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி உறுப்பினர்களும் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் மக்கள் நலனில் அக்கரை காட்டாமல் அலட்சிப்படுத்துவது பொதுமக்கள் மத்தியில் கடையநல்லூர் நகராட்சி மீது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. 

     இதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் உடனடியாக எடுக்கவில்லை என்றால் மிகவிரைவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில்  உள்ள அனைத்து பொதுமக்களையும் திரட்டி நகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக சாக்கடைகளை அள்ளி நகராட்சியின் வாயில்லில் கொட்டும் மாபெரும் போரட்டத்தை இன்ஷா அல்லாஹ் அறிவிக்கும் என்று எச்சரிக்கிறது.






No comments: