கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 26, 2013

ஜித்தா: ஆலோசனைக் கூட்டம்!

    23-08-2013 அன்று ஜித்தா (TNTJ) கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனைகூட்டம் AGM கேம்பில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் சகோ. மைதீன் அவர்கள் நஷ்டவாழி யார்? என்ற தலைப்பில் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள்:


1. ரமலானில் நமது சகோதரர்கள் மூலம் வசூலிக்கப்பட்ட பித்ரா கணக்கு சரிகாணப்பட்டு தலைமைக்கு தெரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

2. பெண்கள் மதரஸா தொடங்குவது தொடர்பாக ஊரிலிருந்து (அணைத்து கிளைகளின் ஆலோசனைகளின் அடிப்படையில்) பெறப்பட்ட தகவல் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய மாதாந்திர கூட்டத்தில் மதரஸா அமைப்பது தொடர்பான சாதக பாதகங்கள் குறித்து  விரிவாக எல்லோர் முன்னிலையிலும் விவாதித்து அதற்க்கு எவ்வாறு நமது கூட்டமைப்பு ஒத்துழைப்பது நல்குவது போன்ற விசயங்கள் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வலியுறுத்தபட்டது.

3. அமைப்பின் தற்போதைய பொருளாதார இருப்பு சரி காணப்பட்டு நமதூர் ஜமாஅத் பணிகளுக்கு எவ்வாறு பொருளாதாரத்தை பங்கிட்டு வழங்குவது என்பதை வரக்கூடிய மாதாந்திர கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வலியுறுத்தபட்டது.        

4. உறுப்பினர்கள் சந்தா தொகை வசூலிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. சந்தா வசூலிப்பதற்க்கு   வரும் கூட்டத்தில் பகுதிவாரியாக பொருப்பாளர்களை நியமிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது .

இறுதியில் துவாவுடன் ஆலோசனைக்கூட்டம் இனிதே நிறைவுற்றது..!

No comments: