நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மூன்று திடல்களில் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடையநல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி அதிகாலை 6 மணிமுதலே காயிதேமில்லத் திடலே நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 06.30 மணியளவில் பெருநாள் தொழுகையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மை குழு உறுப்புனர் அப்பாஸ் அலி அவர்கள் நடத்தினார்கள். அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு ஆற்றிய உரையில் இறை நம்பிக்கை மனிதனை நல்லவனாக ஆக்குவதற்கு
உதவியாக இருக்கின்றது. இறை தூதர்கள் உலகில் இறைவனுடைய இறை பணிகளை நடைமுறை படுத்துவதற்காகவே இறைவன் அனுப்பினான் இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்களில் இப்றாகீம் நபி அவர்கள் முக்கியமானவர் ஆவார். அவருடைய தியாகத்தை நினைவு கூறும் முகமாக இஸ்லாமியர்கள் பிராணிகளை அறுத்து பலியிடுகின்றார்கள்.
அறுத்து பலியிடுவதின் நோக்கம், இரத்தம் காண்பவானக இறைவன் மனிதனை படைத்து உள்ளான் அதிலிருந்து மனித உயிர்களை பாதுகாக்கவே இறைவனின் கட்டளையின் பிரதான நோக்கம். எப்படியெனில் மனிதனது இரத்தம் தணிய வேண்டும் என்கிற யதார்த்தம் ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற பலி பிராணிகளை பலியிடுவதின் மூலம் தீர்க்கப்படுகின்றது. இதனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் ஊயிரை எக் காரணம் கொண்டும் எடுப்பதற்க்கு இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. இப்படி மனித உரிமையில் தலையிட இஸ்லாம் தீவிரவாதத்தை எல்லா வகையிலும் தடுக்கின்றது என கூறினார்.
இதில் ஆயிரகணக்கான இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுன் மற்றும் பேட்டை கிளை நிர்வாகிகள் அய்யூப் கான், ஹாஜா மைதீன், ஜலாலுதீன், அப்பாஸ், நிரஞ்சர் ஒலி, குறிஞ்சி சுலைமான் மற்றும் தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
கடையநல்லூர் காவல் ஆய்வாளர் சபாபதி தலைமையில் உதவி ஆய்வாளர் முத்து லட்சுமி மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர். இது போன்று ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளி திடலில் முஹம்மது நாசர் அவர்களும் மக்கா நகர் தவ்ஹீத் திடலில் அப்துல் சலாம் அவர்களும் பெருநாள் தொழுகையும் அதை தொடர்ந்து மக்களுக்கு சொற்பொழிவும் நிகழ்த்தினார்கள். தொழுகைக்கு பிறகு கடையநல்லூர் பகுதியில் ஆயிரக்கானக்கான ஆடுகளும், மாடுகளும் அறுத்து பலியிட்டு ஏழைகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment