கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 7, 2013

ஜித்தா: ஆலோசனை கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர்   கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் கடந்த 

வெள்ளிக்கிழமை (04-10-2013) அன்று சரபியா பகுதியில்  இனிதே நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட விஷயங்கள் விரிவாக ஆலோசிக்கப்பட்டது:


1) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சந்தித்து வரும் கடும் பொருளாதார சிக்கல்களை கவணத்தில்கொண்டு   நிர்பந்தத்தில் இருக்கும் பேட்டை கிளை நிர்வாகத்திற்கு ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பு சார்பாக 1,50,000 ( ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம்) ரூபாய் நம்முடைய இலக்காக நிர்ணயித்து உறுப்பினர்கள்  அனைவரும் சேர்ந்து    வசூல் செய்து  கொடுப்பது என ஏக மனதாக முடிவு எடுக்கப்பட்டது...!

2) கூட்டு குர்பானி வகைக்கு ஒரு பங்குக்கு SR 130 வாங்குவது என முடிவு எடுக்கப்பட்டது.

3) இறைவன் நாடினால்  வருகிற ஹஜ் பெருநாள் 4 தினம்  பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது அதில் மாநில தாயிக்களை கொண்டு இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.


 குறிப்பு;

           பெருநாள் விடுமுறையில்  ஜித்தா மண்டல நிகழ்ச்சிகள் இருப்பதால் அந்த நிகழ்ச்சிகளின் அட்டவனையை அனுசரித்து பெருநாள் சந்திப்பு கூட்டம் நடத்தப்படும்  .

இறுதியில் துவாவோடு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.





No comments: