கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 31, 2014

2014 ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

   ஹஜ் 2014-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் 



வரையறைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது. 

   சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2014-ற்கான விண்ணப்பப் படிவங்களை 1-2-2014 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 15-3-2014.

   வாழ் நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. 15-3-2014 அன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 31-03-2015 வரையில் செல்லத்தக்க பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டும். IFS குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்கவேண்டும். ஹஜ் 2014 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2014-ற்கான வழிமுறைகளைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.com என்ற இணையதளத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

   பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.300/- (ரூபாய் முன்னூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் கணக்கு எண். 33564923057-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 15-3-2014க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments: