21.02.14 அன்று இக்பால் வடக்கு தெருவில் உள்ள ந யினார் அலி அவர்களின் மனைவியும், வாஹித், கஸீப், பைசல் ஆகி யோரின் தாயார் வஃபாத்
ஆகி விட்டார்கள். அன்னாரது ஜனாஸவை ஏகத்துவ அடிப்படையில் தொழுகை நடத்தி அடக்கம் செய்ய வேண்டும் என்று வெளிநாட்டில் உள்ள அவரது மகன்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் அன்னாரது ஜனாஸா டவுண் கிளை மர்க்கஸிற்கு கொண்டு செல்லப்பட்டு, அவரது பேரனும் டவுண் கிளை பேச்சாளர் சகோ வாஹித் தொழுகை நடத்தினார். பின்னர் ஜாமிவுல் அன்வர் பள்ளி மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. அனைத்து கிளை சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
மார்க்கம் சொல்லித்தரும் விதம் பெண்களும் ஜனாஸாவில் கலந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கில் அறிவிப்பு செய்து 50க்கும் மேற்பட்ட பெண்களும் ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டனர்.
அபூ தல்ஹாவின் மகன் உமைர் மரணித்த போது அபூ தல்ஹா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அவ்வீட்டாரிடம் நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். அவர்கள் வீட்டிலேயே அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னே நின்றார்கள். அவர்களின் பின்னால் அபூ தல்ஹா (ரலி) நின்றார்கள். (அவரது மனைவி) உம்மு ஸுலைம், அபூ தல்ஹாவின் பின்னே நின்றார். அவர்களுடன் வேறு யாரும் இருக்கவில்லை. அறிவிப்பவர்: அபூ தல்ஹாவின் மகன் அப்துல்லாஹ் நூல்: ஹாகிம் 1/519
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் இறந்த போது அவரது பிரேதத்தைப் பள்ளிவாசலுக்குக் கொண்டு வருமாறும், தாங்கள் அவருக்கு (இறுதித் தொழுகை) தொழப் போவதாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியர் சொல்லி அனுப்பினார்கள். அவ்வாறே மக்களும் செய்தனர். அப்போது அவரது உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியரின் அறைகளுக்கு அருகில் கொண்டு வந்து, அவர்கள் தொழுது கொள்வதற்காக வைக்கப்பட்டது. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1771)

No comments:
Post a Comment