கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 2, 2014

போலிஸ் நிலையம் முற்றுகை!

  கடந்த 30-01-14 அன்று கடையநல்லூர் மாவடிக்கால் பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இந்து முன்னணி



மாநில கொள்கை(?) பரப்பு செயலாளர் இளங்கதிரேசன் என்பவன் மிக மோசமாக முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பற்றியும், ஒற்றுமையாக வாழும் கடையநல்லூர் மக்களிடம் கலவரத்தை உண்டு பண்ணும் விதமாகவும் பேசி உள்ளான்.

   இத்தகைய பேச்சின் மீது எந்த வித நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை நடந்து கொண்டது. இதை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் நிர்வாகம் மாவட்ட, மாநில நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தது. இதை அடுத்து இன்று மாலை SMS வழியாக தகவல் கொடுக்கபட்டு சுமார் 500 நபர்கள் மாவட்ட செயலாளர் சகோ பைசல் தலைமையில் நடவடிக்கை எடுக்க கோரி கடையநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதை அறிந்த காவல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் அனைவரும் கலைத்து சென்றனர்.

   மேற்கண்டு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் நடைபெரும் என்றும் அறிவித்து உள்ளது.

 



No comments: