கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 29, 2014

ரியாத் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) தீர்மானங்கள்!

    ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் 27-06-14 அன்று மாலை ரியாத்தில் 




கூட்டமைப்பு தலைவர் சகோ A.S.முகைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

    இதில் சகோ அப்துல் காதர் அவர்கள் "நோன்பினால் மறுமையில் கிடைக்கும் நன்மைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். அதன்பின்னர் நான்கு கிளைகளிலும் நடைபெறும் பணிகள் பற்றி விரிவாக ஆலோசிக்கபட்டது , நோன்பு கஞ்சி மற்றும் பித்ரா வசூல் செய்வதற்கு என்று பகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

1. இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளான முஸ்லிம் சகோதர்களுக்கு நீதி கிடைக்க துவா செய்யவேண்டும்.

2. நீதி கிடைக்கும் வரை நமது சகோதர்கள் தாயகம் செல்வதற்கு ஏர் லங்கா விமானத்தை பயன்படுத்தாமல் புறக்கணிப்பு செய்வது.

3. நோன்பு கஞ்சி மற்றும் பித்ரா உதவியை கிளைகளின் தேவைக்கு ஏற்ப பங்கிட்டு வழங்குவது

4. இன்ஸா அல்லாஹ் வருகின்ற 11-07-14 (வெள்ளிக்கிழமை) அன்று ரியாத் ரஹ்மத் மன்ஸிலில்(தவ்ஹீத் செயலகம்) வைத்து இப்தார் நிகழ்ச்சி நடத்துவது என்றும், இதில் ரியாத் வாழ் கடையநல்லூர் சகோதர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறது.

இறுதியில் துவாவுடன் நிறைவுபெற்றது.




No comments: