கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 6, 2014

கடையநல்லுரில் தீவிரம் அடைந்துள்ள தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு 

பகுதியாக அரசு அதிகாரிகளை கடையநல்லூர் அனைத்து கிளை தலைவர்கள் கடந்த 05.11.14 அன்று தென்காசி வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் சென்று உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை நேரில் சந்தித்தனர்.
    தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரத்தின் துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன், மாமனிதர் நபிகள் நாயகம், விசிறி, ஆகியவை வழங்கப்பட்டது.
    இதை பெற்றுக் கொண்ட அரசு அதிகாரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சார முயற்சியை பாராட்டி நன்றியும் தெரிவித்தனர்.
     அப்போது தென்காசி வருவாய் வட்டாச்சியர் செர்ணராஜ் அவர்களிடம் தீவிரவாதவாத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்ஷா அல்லாஹ் வருகிற 09.11.14 அன்று நடைபெற இருக்கின்ற இரத்ததான முகாம் குறித்து தகவல் அளித்த போது வட்டாச்சியர் அவர்கள் நானே நேரடியாக வந்து முதல் இரத்தம் கொடுக்கின்றேன் என்னுடைய பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள் என்ற கூறினார்கள்.
   இது போன்று அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் உயர் நிலை பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் நோட்டிஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது.  


















No comments: