கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 5, 2014

வளைகுடா நாடுகளுக்கு பார்செல் கொண்டு செல்வோர்கள் கவனத்திற்கு !

    போதை தரும் பொருள்கள் மற்றும் நோய் நிவாரணம் அளிக்கும் சிலவகை மருந்துகள் அதிலும் இந்தியாவில் தயாரிக்கப்படும் சில வகை மூலிகை

(ஹோமியோ, சித்தா) மருந்துகளில் உள்ள மூலப்பொருட்கள் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருளாகும். இத்தகைய தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டு வருபவர்கள் விமான நிலைய சோதனையின் போது பிடிபட்டால், அதை கொண்டு வருபவருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்பது அந்நாடுகளின் சட்டம்.
   இந்த விதிமுறைகள் ஊரில் உள்ள சிலருக்கு தெரிவதில்லை. சிலர் தெரிந்தும் இதனை யார் பிரித்து பார்க்க போகிறார்கள் என்ற அசட்டு தைரியத்துடன் வெளிநாடு செல்பவர்களிடம் பார்சலில் மறைத்து கொடுத்து விடுகிறார்கள், ஆனால் பாதிக்கபடுவது வேறு ஒருவர்.
    எனவே வெளிநாட்டிற்கு செல்பவர்கள் தாங்களின் நண்பர்கள் அல்லது பிற நபர்கள் வெளிநாட்டில் உள்ள தாங்களின் உறவினருக்கு கொடுத்து விடும் பொருள்களை நெருங்கிய சொந்தமாகவும், நண்பர்களாக இருந்தாலும் நன்கு திறந்து ஆய்வு செய்த பின்பே அதை பெற்று கொண்டு செல்வதே சிறந்தது. மருந்து பொருளாக இருந்தால் மருந்தின் மூலப்பொருள் அரபு நாடுகளுக்கு கொண்டு செல்ல தடை செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்த பின்பே கொண்டு செல்லவும்.
   கடந்த சுமார் ஆறு மாதத்தில் கேரளாவில் தெரிந்த நண்பர்கள் கொடுத்த பொருள் மூலமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானா நிலையத்தில் ஒருவர் பிடிபட்டு கேரளா மாநில அரசு தலையிட்டு சில மாதங்களுக்கு முன்பு விடுதலை பெற்றார்.
    அதே போன்று தற்போது ஒரு சில தினங்களுக்கு முன்பும் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக குவைத் சென்ற ஒரு நபருக்கு அதிர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. நண்பர் ஒருவர் கொடுத்த ஊறுகாய் பாட்டில் சுமை அதிகம் காரணமாக அதனை தன்னுடைய வீட்டிலே எடுக்காமல் வைத்து விட்டு சென்று விட்டார். அதன் பின்பு வீட்டில் உள்ளவர்கள் ஊறுகாய் பாட்டிலை பிரித்து பார்த்த போது அதனுள்ளே ஒரு பை சுற்றப்பட்டு இருப்பதை கண்டு அதையும் பிரித்து சுவைத்த போது கஞ்சா என்று தெரியவந்தது. தற்போது இதனை கேரளா காவல் துறை விசாரித்து சிலரை கைது செய்துள்ளது.
    எனவே வெளிநாடு செல்பவர்கள் தெரிந்தவர்கள் என்று பொடுபோக்காக இல்லாமல் அதிகம் கவனம் செலுத்தவும்.

No comments: