தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக வாழ் கடையநல்லூர் சகோதர்களின் மாதந்திர ஆலோசனைக் கூட்டம் மற்றும் வரவு-செலவு தாக்கல் செய்யும்
நிகழ்ச்சி இன்று மாலை துபாய் JT மர்கஸில் வைத்து நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பற்றி விளக்கப்பட்டது.
மேலும் 2014 ஆண்டின் வரவு-செலவு தாக்கல் செய்யப்பட்டு விளக்கப்பட்டு கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
1. அமீரகத்தில் கடையநல்லூர் சகோதர்களை சந்தித்து தனி நபர் தாவாவை வீரியப்படுதுவது.
2. கடையநல்லூரில் உள்ள அரசு மருத்துவ மனையில் இருதய நோய்க்கான அவசர சிகிச்சை அளிக்கும் வசதிகள்(வென்ட்டிலேட்டர்)மற்றும் மருந்துகள் இல்லாத காரணத்தால், திடீர் என்று ஏற்படும் இருதய நோய்க்கான சிகிச்சை உள்ளூர் அரசு மருத்தவ மனையில் வழங்கமுடியாமல் வெளியூர்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. இதனால் அதிகமான உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கிளை நிர்வாகங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ அலுவரை சந்தித்து இதுபோன்ற குறையை நீக்க வழிசெய்யுமாறு கேட்டு கொள்கிறது.
3. கிளைகளுக்கான புள்ளி விவரம் மற்றும் பரிசு தொகை சம்பந்தமாக அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்வது.
ஆகிய தீர்மானங்களுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

No comments:
Post a Comment