கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 18, 2015

டவுண் கிளை நோன்பு பெருநாள்(2015) தொழுகை

     நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஷவ்வால் பிறை தென்பட்டதையடுத்து நான்கு இடங்களில் பெருநாள் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டவுண் கிளை சார்பாக காயிதே மில்லத்  திடலில் வைத்து நடைபெற்ற தொழுகையில் கடையநல்லூரை சார்ந்த இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும்



சிறுவர்,சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி அதிகாலை 6 மணிமுதலே தொழுகை திடலே நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் பெருநாள் சிறப்பு தொழுகையை மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துன் நாசர் அவர்கள் தொழுகை நடத்தினார்கள். அதை தொடர்ந்து அவர் மக்களுக்கு ஆற்றிய பெருநாள் உரையில் இஸ்லாத்தில் ஜாதிப் பிரிவுகள் இல்லை, இஸ்லாம் வட்டி, வரதட்சணை, மது,போன்ற சமூக விரோத செயல்களுக்கு இடமில்லை, இஸ்லாம் சமூக நல்லிணக்கத்தை போதிக்கின்றது, இஸ்லாம் தீவிரவாதத்துக்கு எதிரானது, ஒருவரை வாழ வைத்தவன் ஒரு மனித சமுதாயத்தையே வாழ வைத்தவன் போல் ஆவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் டவுண் நிர்வாகிகள் அய்யூப் கான்,ஹாஜா மைதீன், ஜலாலுதீன்,
L குறிச்சி சுலைமான் மற்றும் தொண்டரணினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
இது போன்று பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் திடலில் மாநில பேச்சாளர் முகம்மது தாஹா அவர்களும் ரஹ்மானியாபுரம் 3வது தெரு மர்யம் பள்ளி திடலில் சாதாம் அவர்களும், மக்கா நகர் தவ்ஹீத் திடலில் மாவட்ட பேச்சாளர் ஷரீப் அவர்களும் பெருநாள் தொழுகையும் அதை தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள்.
தொழுகைக்கு முன்பாக கடையநல்லூர் நகர் முழுவதும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம்மாக அரிசி வழங்கப்பட்டது. தென்காசி கோட்டாச்சியர் வெங்கடேஷ் தலைமையில் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் லெட்சுமணன் மேர்பார்வையில், தாசில்தார் சுதந்திரராஜ் காவல் ஆய்வாளர் ஐய்யப்பன்,உதவி ஆய்வாளர் முத்து லெட்சுமி ஆகியோர் பாதுகாப்பு ஏர்பாடுகளை செய்து இருந்தனர்.













No comments: