கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 23, 2015

ஜித்தா ஆலோசனை கூட்டம்!

    அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் கடையநல்லூர் கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் கடந்த 20-08-2015 அன்று சிறப்பாக 

நடைபெற்றது.

சகோ. முஜாகிர் (ஜித்தா மண்டல தாயி) "இறை அச்சம்" என்ற தலைப்பில் துவக்க உரை  நிகழ்த்தினார்கள். அதை தொடர்ந்து கடையநல்லூர் கூட்டமைப்பின் நிர்வாக மாற்றம் மண்டல தலைவர் சகோ. முனாப் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. 

நிர்வாக மாற்றத்திற்கு முக்கிய காரணம் ஏற்கனவே பொறுப்பில் இருந்த சகோ. கவுஸ்பாசித் மற்றும் சித்திக் ஆகியோரில் சகோ. கவுஸ் மற்றும் பாசித் தங்களுடைய பணி அலுவல்கள் காரணமாக பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்ததின் அடிப்படையில் புதிய பொறுப்பாளர்களாக சகோ. கும்மாளி காதர் மற்றும் விஸ்வா காதர் ஆகிய இருவரும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர். 

புதிய பொறுப்பாளர்கள்:
சகோ. கும்மாளி காதர் (00966 055 611 9908),
சகோ. விஸ்வா காதர் (00966 050 267 3908),
சகோ. சித்திக் (00966 050 941 9349)

இனி மேற்கண்ட பொறுப்பாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகத்தை கவனித்துக்கொள்வார்கள் என்பதை நமதூரில் உள்ள நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள், அணைத்து கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

இது வரை தங்கள் அலுவல்களையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்விற்காக,  மறுமை வெற்றிக்காக நமது கூட்டமைப்பில் ஒருங்கினைந்து செயல்பட்ட சகோ. கவுஸ் மற்றும் பாசித் அவர்களுக்கு அல்லாஹ் பரகத் செய்ய துவா செய்கிறோம்.

அதை தொடர்ந்து நமதூரில் இயங்கி வரும் நெல்லை மேற்கு மாவட்ட செயல்பாடுகள் மற்றும் அனைத்து கிளைகளின் செயல்பாடுகளும் சிறப்பாக இருப்பதையும் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

டவுண் கிளை மார்கஸ் வசூல் மந்தமாக நடைபெறுவதை பற்றி கலந்து  ஆலோசிக்கப்பட்டது அதோடு புதிய பொறுப்பாளர்கள் அது விசயத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு நமது கூட்டமைப்பு சார்பாக எவ்வாறு பங்களிப்பு செய்வது தொடர்பாக அடுத்த அமர்வில் இறுதி முடிவு எடுப்பது என கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டது.

சகோ. கவுஸ் மற்றும் பாசித் ஆகியோரின் மேலான ஒத்துழைப்பையும்ஆலோசனைகளையும்  எப்போதும் போல் அவர்கள் இனி வரும் காலங்களில் கூட்டமைப்பிற்க்கு வழங்கிட ஜித்தா மண்டல தலைவர் ஆலோசனை வழங்கினார்கள்.

இறுதியில் கூட்டம் இனிதே துவாவோடு நிறைவு பெற்றது. 

No comments: