கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 21, 2015

TNTJ நிர்வாகிகள் மீது முபாரக் ஜமாத்தினர்(MMJ) கொலை வெறி தாக்குதல் முழு விவரம் !

19-09-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேற்கு மாவட்ட தலைவர் சகோ .பைசல் அவர்களை மஸ்ஜித் முபாரக் நிர்வாகி சில விளக்கங்கள் பெற 

பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று கொண்டு சகோ.பைசல் மற்றும் சில சகோதர்கள் இஷா தொழுகைக்கு மஸ்ஜித் முபாரக்கிற்கு தொழுகைக்கு சென்றனர் அப்போது தொழுகையின் ஜமாஅத் முடிந்த நிலையில் இருந்ததால் ஒழு செய்து விட்டு தொழ செல்லும் போது சகோ.ஜின்ஷா, கோரி , சைபுல்லா ஹாஜ , ஒட்டன் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் சிலர் தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களை வழிமறித்து, உங்களை யாருடா பள்ளிக்கு வர சொன்னார்கள் என்று நாக்கூசாத வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தனர். அவர்கள் சிலர் பள்ளியின் முன்கதவை பூட்டி வேகமாக தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் தகவல் அறிந்த ஜமாஅத் சகோதர்களும் பள்ளியில் தொழுகையில் கலந்து கொண்ட சகோதர்களும் காயம் அடைந்த சகோதரரை மருத்துவ மனையில் அனுமதித்து காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.
கடந்த வெள்ளிகிழமை ஜும்மா உரையில் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை கொண்டும், மக்களை தூண்டும் வகையிலும் சைபுல்லாஹ் ஹாஜா பேசியதும் இதற்கான காரணங்களாக அமைந்தது.
புகாரை பெற்று கொண்ட காவல்துறை முபாரக் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். மஸ்ஜித் முபாரக் நிர்வாகிகளும் புகார் அளித்தனர்.
வட்டாச்சியர் விசாரணை !
இருசாரர்ரின் புகாரை பெற்று கொண்ட காவல் துறை 20-09-15 அன்று வட்டாச்சியர் விசாரனைக்கு வருமாறு இருசாரருக்கும் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில் மஸ்ஜித் முபாரக் பள்ளியை நிர்வாகம் செய்வது , பள்ளியில் தொழுகைக்கு வரும் சகோதர்களை தடுப்பது, தாக்குதல் நடத்துவது, போன்ற பல்வேறு விசயங்கள் பற்றி இருதரப்பினரிடமும் விசாரணை செய்து விசாரணை தீர்ப்பை பின்னர் வழங்குவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று நடைபெற்ற விசாரணையில் மாவட்ட , கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களும் திராளாக கலந்து கொண்டனர்.


No comments: