கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 20, 2010

பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு

ல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக கடையநல்லூரில் 19. 06. 2010 (சனி) மாலை 4 : 30 மணியளவில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி  நடத்தப் பட்டது.


இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்..யூ. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் டி.ஏம். ஜபருல்லாஹ், அரசு நலத்திட்ட செயலாளர் சுலைமான், நகர செயலாளர் முஹம்மது காசிம், பொருளாளர் பாவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சப் கலெக்டர் திரு. மூர்த்தி அவர்கள் கடையநல்லூர் நகரில் பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி K.U.ஜெஸிமா ரஸானா(1123/1200), (மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி) பத்தாம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர் S. ராமசுப்பிரமணியன் (485/500), (ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி) ஆகியோருக்கு முதல் பரிசையும்.கடையநல்லூர் நகரில் பன்னிரண்டாம் வகுப்பில் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவர் C.சங்கர் கோபி (1111/1200),( உலகா மேல்நிலைப் பள்ளி), பத்தாம் வகுப்பில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மாணவர் K.S.. முஹம்மது அம்மார் (483/500), (தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளி) ஆகியோருக்கு இரண்டாம் பரிசை வழங்கி பாராட்டினார்.



+2 1st prize

+2 2nd prize

+2 3rd prize

10th 1st prize

10th 2nd prize


10th 3rd prize

Audiance








கடையநல்லூர் நகரில் பன்னிரண்டாம் வகுப்பில் மூன்றாவது இடத்தைப் பெற்ற மாணவர் முஹம்மது அலி (1108/1200), (மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி) பத்தாம் வகுப்பில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவி M.ஆயிஷா பர்ஹானா (481/500), (மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி) ஆகியோருக்கு மாவட்டக் கல்வி ஆதிகாரி சக்தி மோகன் அவர்கள் மூன்றாம் பரிசினை வழங்கி பாரட்டினார்.

மேலும் சப் கலெக்டர் திரு. மூர்த்தி மற்றும் மாவட்டக் கல்வி ஆதிகாரி சக்தி மோகன் ஆகியோருக்கு சகோ.பீ.ஜெ.அவர்கள் மொழிபெயர்த்த திருக் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்கள் வழங்கப்பட்டது.



அனைத்து பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர்களும் மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான பரிசுக்கான தொகையை வளைகுடா வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் செய்திருந்தனர். இறுதியில் நகரத் தலைவர் முஹம்மது கோரி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.



No comments: