அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் 17-11-2010 அன்று அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத்தின் மாதாந்திர கூட்டம் சரியாக மாலை 5 மணிக்கு சகோதரர் முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றதுஇதில் தாயகத்திலிருந்து சகோதரர் SSU ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தொலைபேசி மூலமாக கூடியிருந்த சகோதரர்களுக்கு ஈமானில தெளிவும் உறுதியும் எனற தலைப்பில் இந்த ஏகத்துவ கொள்கைக்கு எதிராக நடந்து வரும் சமபவங்கள் பற்றியும் எதிர்ப்புக்கு மத்தியில் நாம் எவ்வாறு உறுதியாக இருக்கவேண்டும் என்பது பற்றியும் மிகவும் தெளிவாக விளக்கினார்.
மேலும் தற்போது நமது ஊரில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் பற்றிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது அல்ஹம்துலில்லாஹ்.
நமது ஊரில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக நடந்து வரும் மார்க்க பணிகள், மற்றும் சமுதாய பணிகள் பற்றி சகோதரர் முஹம்மது அலி விளக்கி கூறினார்.
நமது ஊரில் பெண்களிடம் காணப்படும் மார்க்க அறிவின்மையால் ஏற்படும் தகாத சம்பவங்களை முற்றாக அழிக்கவேண்டும் என்பதற்க்காகவும் இன்னும் பெண்களிடம் மார்க்கத் தேடல் வரவேண்டும் என்பதற்க்காவும் முதல் முயற்ச்சியாக பெண்களுக்கான கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது
கட்டுரையின் தலைப்பு : இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்
பரிசு தொகை
முதல் பரிசு : 5000 மதிப்புள்ள 2 1/2 கிராம் தங்க மோதிரம்
இரண்டாவது பரிசு : 3,000 மதிப்புள்ள மினி கிரைண்டர்
மூன்றாவது பரிசு : 2,000 மதிப்புள்ள குக்கர்
இன்னும் ஆறுதல் பரிசுகளும் உண்டு
இரண்டு மாத கால அளவுகளில் கட்டுரை ஜனவரி 30ம் தேதிக்குள் கிடைக்கவேண்டும் என்று அறிவிப்பு செய்யவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது
இன்ஷாஅல்லாஹ் மாற்று மத சகோதரர்களுக்கும் இஸ்லாத்தை பற்றி எடுத்துசொல்லும் முகமாக அவர்களுக்கும் கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது
மேலும் நமது ஊரில் முன்பு நடந்து கொண்டிருக்கிற வட்டியில்லா கடன் திட்டத்திற்க்கு நாம் சேமிப்பு என்ற முறையில் மாதம் ஒரு தொகையை அனுப்பி அத்திட்டத்திற்க்கு உதவவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது விருப்பமுள்ளவர்கள் சேரலாம் என்றும் வந்திருந்த மக்களுக்கு அறிவிக்கப்பட்ட்து.
இன்னும் கல்வி உதவிதொகை மருத்துவ உதவித்தொகை கேட்டு நமக்கு விண்ணப்பங்கள் வருகின்றன அதை நிவர்தி செய்யும் பொருட்டு அதெற்க்கெண ஒரு தொகையை நாம் ஒதுக்கவேண்டும் என்றும் விளக்கமாக சொல்லப்பட்டது
ஊரின் சென்ற மாத செயல் பாட்டு அறிக்கை வாசித்து காட்டப்பட்டது
நமது ஊர் சகோதரர்களை சந்தித்து மார்க்க விளக்கங்கள், நமது செயல் பாட்டு விளக்கங்கள் பற்றி எடுத்து சொல்ல வேண்டும் எனபதை விளக்கி அதை நடைமுறை படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது
நமது ஊர் சகோதரர்களை சந்தித்து மஜ்ஜிதுல் முபாரக்கிலும் மஜ்ஜிதுல் அக்ஸாவிலும் நடந்து வரும் செயல் பாடுகளை விளக்கி கூற வேண்டும்
மார்க்க விளக்கங்கள், நமது செயல் பாட்டு விளக்கங்கள் பற்றி எடுத்து சொல்ல வேண்டும் எனபதை விளக்கி அதை நடைமுறை படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது
துவாவுடன் கூட்டம் முடிவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment