கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக காயிதே மில்லத் ஈத்கா திடலில் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொடர் மழையின் காரணத்தினால் மாற்று ஏற்பாடாக முபாரக் பள்ளி முன்புள்ள பஜார் ரோட்டில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
அதிகாலை 6.00 மணி முதலே ஏரளாமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சாரை சாரையாக வரத்தொடங்கினர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட காரணத்தினால் முபாரக் பள்ளிவாசலின் நான்கு தளங்களும் நஜாஹ் நர்ஸரி வளாகம் மற்றும் பஜார் முழுவதும் நிரம்பி வழிந்தனர். சரியாக 6.45 மணி அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலாண்மைக்குழு உறுப்பினரும், கடையநல்லூர் தலைமை இமாமுமாகிய சகோ. எஸ்.எஸ்.யு, ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தொழுகை நடத்தி மக்களுக்கு பேருரை ஆற்றினார்கள். தொழுகை முடிந்தவுடன் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
சகோதரர் தனது உரையில் ஹஜ்ஜுப் பெருநாள் நோக்கத்தைப் பற்றியும், குர்பானிக் கொடுப்பதின் அவசியத்தைப் பற்றியும் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் ஆடு, மாடு இவைகளின் இறைச்சியை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது பற்றியும் குர் ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் அளித்தார்கள்.
இதைப் போல் மஸ்ஜித் மரியம், மஸ்ஜித் அக்ஸா, மக்கா நகர் ஆகிய திடல்களிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்த பிறகு கடையநல்லுாரில் மஸ்ஜித் முபாரக் ல் கூட்டு குர்பானி அடைப்படையில் ஆடு மற்றும் 25 ற்கும் மேற்பட்ட மாடுகள் இறைவனுக்காக அறுக்கப்பட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
காவல்துறை ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்.மஸ்ஜித் முபாரக் – தொழுகைக் காட்சி
1 comment:
அல்ஹம்துலில்லாஹ் பல அவதூறு பிரச்சாரங்களுக்கு மத்தியில் மக்கள் இன்னமும் தவ்ஹீத் ஜமாத் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.இந்த தொழுகைக்கு கூடிய கூட்டத்தை தவ்ஹீத் ஜமாத்திற்க்கு கூடியதாக நாம் கூறவில்லை மாறாக மக்கள் இபாபத்திற்க்காக கூடினார்கள் ஆனால் இதை விமர்ச்சிக்கிறேன்(தவ்ஹீத் ஜாமாத்தை)என்று மன்மத ராசா (ஐஸ் குச்சி)ஆதரவு வெப் சைட்டில் ஒரு வரிசைக்கு 7 பேர் மொத்தம் 700 பேர் தவ்ஹீத் ஜமாத்தின் கோட்டையில் தவ்ஹீத் ஜமாதிற்க்கு தோல்வி போன்ற ஈனத்தனமான வாதங்களை வைத்து மீண்டும் எங்களுக்கும் இஸ்லாத்திற்க்கும் சம்பந்தம் இல்லை என்று நிருபித்துள்ளார்கள்.கூட்டத்தை காட்டுவதற்க்கு இது தவ்ஹீத் ஜமாதின் தனிப்பட்ட செயல்பாடுகளை சொல்லும் நிகழ்ச்சியல்ல இது முழுக்க முழுக்க இபாபத்(தொழுகை)சம்பந்தபட்டது இதை அவர்கள் விளங்கவில்லை விளங்கவும்மாட்டார்கள்.தவ்ஹீத் ஜாமாத் கூட்டத்தை காட்டி மக்களை ஏமாற்றத்தேவையில்லை ஏனென்றால் அறிவித்தமாத்திரத்தில் லட்ச்சோப லட்ச சமுதாய சொந்தங்களை திரட்டும் சக்தி தவ்ஹீத் ஜமாதிற்க்கு உண்டு இது அவர்களுக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும்.அவர்கள் கனக்குப்படியே வந்தாலும் அவர்களுடையவாதம் பொய்யானது என்று விளங்கும் .மஸ்ஜித் முபாரக் முழுவதும் நிறைந்து (கீழ் பகுதி)நஜாக் பள்ளி வளாகமும் நிறைந்து பஜார் ரோட்டில் எவ்வளவு தூரம் மக்கள் நின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் .என்னைப்போல் உள்ளவர்கள் ஊரில் தவ்ஹீத் ஜமாத்தில் இல்லாத சகோதரர்களிடம் (பெருநாள்)அன்று டெலிபோனில் திரட்டிய தகவல்கள் இதெல்லாம் இதை அவர்கள் விமர்ச்சிப்பது யானை தன் தலையில் தானே மன் அள்ளிபோட்டதுபோல்தான் சரி அவர்கள் கூற்றுப்படியே இந்த தொழுகையில் கூடியவர்கள் முழுக்க தவ்ஹீத் ஜமாத் ஆதரவாளர்கள்தான் இதை அவர்கள் மறுக்க முடியுமா.இரண்டு குழுக்கள் மிக பிரமாண்டமாக விளையாட்டுபோட்டி உட்பட பெருநாளை கொண்டாடி முடித்தார்கள் .மூன்றாவது நாள் காத்திருந்து தொழுதவர்கள் உண்மையாளர்கள் தவ்ஹீத் ஜமாத்காரர்கள் இதை மறுப்பதற்க்கு செக்ஸ் மன்னனின் அடிமை வசிறிகளுக்கு தைரியம் உண்டா
Post a Comment