இந்தக் கூட்டத்தில் அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோ.முஹம்மது அலி அவர்கள் கடந்த ஒரு வருட செயல் பாட்டு அறிக்கை , மற்றும் வரவு செலவு கணக்கை வந்திருந்த மக்களுக்கு வாசித்துக் காண்பித்தார்கள்.
அதன் பிறகு பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்ட்து.
தேர்தல் அதிகாரியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டல செயலாளர் சகோ.அபுதாஹிர் அவர்கள் செயலாற்றினார்கள்.
புதிய நிர்வாகிகளின் விபரம் வருமாறு :
தலைவர் : சகோ. முஹம்மது இபுறாகீம் மொபைல் நம்பர் : 00971-55-4058502
துனைத் தலைவர் : சகோ. சாதிக் மொபைல் நம்பர் : 00971-55-8646184
செயலாளர் : சகோ. லத்தீப் மொபைல் நம்பர் : 00971-50-4651640
பொருளாளர் : சகோ.மசூது மொபைல் நம்பர் : 00971-55-4481385புதிய நிர்வாகம் தேர்ந்தெடுத்த பிறகு, தாயகத்திலிருந்து மாநில மேலாண்மைக் குழுத்தலைவர் சகொ.ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் ஜனவரி 27 போராட்டம் ஏன் ? என்ற தலைப்பிலும் இதற்காக கடையநல்லூரில் செய்யப்பட்ட பணிகள் குறித்தும், இனி செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கம்மளித்தார்கள். எல்லாவற்றிக்கும் மேலாக இந்த போராட்டம் வெற்றி அடைய அல்லாஹ்விடம் அனைவரும் இறைஞ்ச வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.
பிறகு உரையாற்றிய தலைவர் சகோ. இபுறாகீம் அவர்கள் . பழைய நிர்வாகத்திற்கு செயல்வீரர்கள் ஒத்துழைத்தது மாதிரி புதிய நிர்வாகத்திற்கும் ஒத்துழைக்கும்படி வந்திருந்த மக்களிடம் கேட்டுக் கொண்டார் .
இறுதியாக துனைத்தலைவர் சகோ. சாதீக் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். துஆ உடன் கூட்டம் இனிதே முடிவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment