தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள போராட்டம் பற்றி சுவர் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. சுவர் விளம்பரம் செய்யப்பட்டவுடன் அந்த பகுதியில் உள்ள SDPI ரவுகள் பாபர் மஸ்ஜித் தீர்ப்பு கண்டனப் போராட்டத்தின் விளம்பத்தை அழித்து அதில் சுன்னாம்பு அடித்துவிட்டு SDPI என எழுதி வைத்துள்ளனர்.
சமூதாய ஒற்றுமை என்று கூறி கிழம்பிவிட்டு , பாபர் மஸ்ஜித் அநியாயதீர்ப்பை கண்டித்து செய்யப்பட்ட சுவர் விளம்பத்தை அழித்து, தாங்கள் பாசிச சக்தியை விட கோடூரமானவர்கள் என்பதை உலகிற்கு வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர்.
ஆளும் அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின் அ நீதியை எதிர்த்து நபி(ஸல்) கூறிய குறள் கொடுக்கும் ஜிஹாதிற்க்கான அழைப்பு விளம்பரம்
அழைப்பு பணியை அழிக்க நினைக்கும் SDPI யின் சமுதாய விரோத செயல்..
இப்படி இறை இல்லத்திற்க்காண போரட்ட அழைப்பு பணியை முடக்கிய நெல்லை மாவட்ட தென்காச் SDPI ஐ சார்ந்த இவர்களை பார்த்தால் அழைப்பு பணி எங்களுக்கு தேவை இல்லை என்று திருப்பூர் மாவட்ட SDPI தலைவர் அமானுல்லாஹ் கூறியது தான் நினைவில் வருகிறது
நன்றி : http://www.tntj.net/
3 comments:
ஹிந்துத்துவா என்றால் என்ன? சமூக விரோதச் செயல் என்றால் என்ன? பாபரி மஜீத் இடிப்பு தினம் டிசம்பர் 6 என்று நேற்று பிறந்த குழந்தைக்கு கூட தெரியும். அதை மறந்துவிட்டு உங்கள் இஸ்டத்திற்கு ஜனவரி 27 - இல் ஏன் மாநாடு?? யாரிடம் எவ்வளவு பெட்டி கை மாறியது BJP உடன் அந்தரங்க உறவா?? முஸ்லீம் சமூகத்தை இப்படி கொச்சைப் படுத்துவது ஏன்?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
ஹிந்துத்துவா என்றால் என்ன? சமூக விரோதச் செயல் என்றால் என்ன? என்பதை நீங்களும் சொல்லுங்களேன். எங்களைப் பொருத்தவரை தென்காசியில் SDPI (ஹிந்துத்துவாவை மிஞ்சிய வாதிகள்) செய்த இழிவான கேடுகெட்ட செயல் இந்த செயல் ஹிந்துத்துவாவுடன் சேர்ந்த அதனையும் மிஞ்சிய சமூக விரோதச் செயல். இதில் அறிவுடையோர் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்காது.
பாபர் மஸ்ஜித் தினம் டிசம்பர் 6 என்று நேற்று பிறந்த குழந்தைக்குக் கூட தெரியுமாம்(?) அது சரி உங்களுக்கு இடித்த தினம் தான் தெரியுமா? இல்லை பாபர் மஸ்ஜித் என்பது அந்த இடத்தில் கட்டப்படவே இல்லை என்று சொன்ன மூன்று கிறுக்குத்தனமான (அ)நீதிபதிகள் தீர்ப்பு(?) சொன்ன தேதி தெரியுமா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தைப் பொருத்தவரை டிசம்பர் 6 ம் தேதி என்று சடங்காக இல்லாமல் இதன் நிலை மக்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை உண்டாக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது தான் குறிக்கோள்.
டிசம்பர் 6 தான் வைக்க வேண்டும் என்ற ஏதாவது சட்டம் உள்ளதா?
BJP யிடம் பெட்டி கைமாறியதா? அது சரி மக்கள் நன்றாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு விடயத்தையும் உணர்ந்து வைத்திருக்கின்றார்கள்.
தற்போது நீங்கள் செய்துள்ள இந்த செயல் BJP யிடம் பெட்டி வாங்கியதைப் போன்று உள்ளதா?
அல்லது அல்லாஹ்வுக்காக பள்ளியை மீட்க இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ம் தேதி மக்கள் திணறக் கூட்டி இஸ்லாமிய சமூகத்திற்காக பாடுபடக் கூடியவர்கள் பெட்டி வாங்கினார்களா? என்பது மக்களுக்கே நன்றாக புரியும்.
முஸ்லிம் சமூகத்தைக் கொச்சைப் படுத்துகின்றோமா?
ஆம். அரசியலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக முஸ்லீம்களையே அடகு வைத்து இஸ்லாத்தை விட்டு வெளியே போகின்ற அளவுக்கு இணைவைப்பு, இசை ..... போன்ற பலவகையான இழிசெயலினால் முஸ்லிம் சமூகத்தைக் கொச்சைப்படுத்துவது யார்? என்று சிந்தித்துப் பாருங்கள் அப்போது தெரியவரும்.
தென்காசியில் டி.என்.டி.ஜே. யின் அத்துமீறலும் ஆகாச புளுகும்!
தென்காசி நகரில் டி.என்.டி.ஜே. எழுதிய சுவர் விளம்பரத்தை அழித்ததாக தங்களது இணையதளத்தில் நாடகமாடியுள்ளனர். ஆனால் நடந்த உண்மை நிகழ்வு இதோ:
கடந்த ஜனவரி 9ல் தென்காசியில் நடைபெற்ற டி.என்.டி.ஜேயின் கருத்தரங்கத்திற்காக மஹ்மூது மிஸ்பாஹி ஆலிம் அவர்களின் வீட்டு சுவரில் அவரின் அனுமதி பெறாமலேயே விளம்பரம் செய்திருந்தனர். அதை அழித்துவிட்டு எஸ்.டி.பி.ஐயின் சென்னை மண்டல மாநாட்டு விளம்பரம் எழுத உரிமையாளர் அனுமதி தந்திருந்தும் மேற்படி நிகழ்ச்சி முடியும் வரை காத்திருந்து விட்டு டி.என்.டி.ஜே. நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அச்சுவரில் வெள்ளை சுண்ணாம்பு அடித்து கு.ஈ.க.ஐ ஊதடூடூ என குறிப்பிட்டு அனுமதி பெற்ற சுவர் என்பதையும் எழுதி விட்டு வந்துள்ளனர் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிள். ஆனால் மறுநாள் அந்த இடத்தில் வீட்டு உரிமையாளரிடமோ அல்லது அனுமதி பெற்ற எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளிடமோ தெரிவிக்காமல் தங்களது ஜனவரி 27 நிகழ்ச்சிக்கான விளம்பரத்தை அச்சுவரில் எழுதி சென்றுள்ளனர். வம்பு செய்யும் நோக்கோடு செயல்பட்டதால் மறுநாள் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் அதை அழித்து விட்டு தங்களது விளம்பரத்தை எழுதினர் டி.என்.டி.ஜேன் வன்முறை கும்பலோ பல இடங்களில் எழுதியிருந்த எஸ்.டி.பி.ஐன் விளம்பரங்களை அழித்து தங்கள் ஆணவ புத்தியை வெளிப்படுத்தினர். இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் காவல் நிலைத்தில் புகார் அளித்ததில் 9 டி.என்.டி.ஜேவினர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது. இவற்றையெல்லாம் மறைத்து பாபரி விளம்பரத்தை அழித்து விட்டார்கள் என புளுகுவதற்கு என்ன பெயர்? இதற்கு பெயர் தான் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதோ?
இறுதியாக டி.என்.டி.ஜே. அமைப்பினருக்கு நாம் சொல்லிக் கொள்வது எஸ்.டி.பி.ஐ எல்லா மதத்தினரும் இணைந்து பனியாற்றும் பொதுவான அரசியல் கட்சி. மதரீதியான பிரச்சாரங்களிலோ அல்லது விமர்சனங்களிலோ எஸ்.டி.பி.ஐ ஈடுபடாது. இது போன்ற தேவையற்ற வாதங்களிலோ விமர்சனங்களிலோ ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறோம். அவதூறு பிரச்சாரத்திற்கு பதிலாகவே இதை எழுதுகிறோம். எங்கள் நோக்கத்தையும் பயணத்தையும் திசைதிருப்பாதீர்கள். எஸ்.டி.பி.ஐ தடைகள் உடைத்து பாய்ந்து வரும் பெரும் வெள்ளம். இதை தடுக்க நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். இது போன்ற அவதூறு செய்திகளுக்கு விளக்கம் தருவது மாத்திரமல்ல, சட்டரீதியான நடவடிக்கைகளையும் எஸ்.டி.பி.ஐ மேற் கொள்ளும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Post a Comment