JULY 13, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழ் நாட்டில் முஸ்லிமல்லாத மக்களிடம் இஸ்லாத்தைப் பற்றி பரவி இருக்கும் தவறான கருத்துக் களை போக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் முஸ்லிமல்லாத மக்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை போக்கும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக வாணியம்பாடியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான முஸ்லிமல்லாதவர்கள் பங்கு பெற்றனர். இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை பல ஆண்டுகளாக ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டு பரப்பி
வருகிறார்கள். இந்த பொய் பிரச்சாரத்தின் மூலமாக ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை கெடுத்து இதன் மூலம் உயர்ஜாதி பார்பனர்கள் லாபம் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் ஹிந்து மக்களின் மனங்களில் எழும் இயல்பான சந்தேகங்களை போக்கும் வண்ணமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது பாராட்டப்படும் விசயமே.
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று மேடை போட்டு சொல்லும் அளவுக்கு முஸ்லிம்களை தள்ளியது இந்த ஹிந்துத்துவா. இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான பொய் பரப்புரையை தொடங்கியது இன்று நேற்று அல்ல ஒரு நூற்றாண்டு ஆகிறது. இதை முஸ்லிம்கள் எதிர் கொள்வதின் ஒரு பகுதியே இந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி ஆகும். ஹிந்துத்துவா சதியை முறியடித்து மதக்கலவரம் இல்லாமல் மக்கள் அமைதியாக வாழ்ந்தால் சரி. ...வாணியம்பாடியில் இருந்து நண்பர் சிவக்குமார்.
Courtesy:http://www.sinthikkavum.net
No comments:
Post a Comment