கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 4, 2011

அமீரக கடையநல்லூர் TNTJ சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம்

ஏக இறைவனின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் சகோதரர்களின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் கடந்த 29/07/2011 அன்று துபை TNTJ மர்கஸில் வைத்து அமீரக கடையநல்லூர் TNTJ பொறுப்பாளர் சகோ.இபுறாஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் TNTJ மாநில அழைப்பாளர் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் இறைப் பணியை வீரியமாக செய்ய வேண்டியதின் அவசியத்தை குரான் ஹதீஸ் மேற்கோள்களுடன் விளக்கி உரையாற்றினார்.சகோ.இபுறாஹிம் அவர்கள் தாயகத்தில் நடைபெறும் பணிகளை பற்றி எடுத்துரைத்தார்.கலந்து கொண்ட அனைவரின் ஆலோசனைப்படி கீழ்கண்டவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்:

1.பேட்டை கிளையில் புதிய TNTJ மர்கஸ் ஏற்படுத்த வேண்டும்

2.பேட்டையில் உள்ள அக்ஸா பள்ளிக்கு சந்தா உட்பட அனைத்து
உதவிகளையும் நிறுத்த வேண்டும்.

3.புதிய TNTJ மர்கஸ் பேட்டையில் ஏற்படுத்துவதற்காக சகோ. ஷேக் அலி மற்றும் சகோ. லியாகத் அலி  பொறுப்பாளராக நியமிக்கப் பட்டனர் .

4.கடையநல்லூரின் எந்தக் கிளைகளுக்கும்  பொருளாதாரம் அனுப்புவதாக 
இருந்தாலும் TNTJ மண்டல தலைமை மூலமாக அனுப்ப வேண்டும்.


No comments: