கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 15, 2011

ரியாத் அஜிஸியா கிளை மாதாந்திரக் கூட்டம் – கிளை தலைவர், செயலாளர் அதிரடி நீக்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலத்தின் கிளைகளுள் ஒன்றான அஜீசியா கிளையின் மாதாந்தர மார்க்க விளக்க நிகழ்ச்சி 14.10. 2011 வெள்ளி அன்று அஜீசியா பகுதி பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.
மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் மைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மண்டல நிர்வாகிகள் சகோ. அரசூர் ஃபாரூக், சகோ. ஃபரீத், சகோ. ஹாஜா மைதீன், சகோ. மோமீன், செயற்குழு உறுப்பினர் சகோ. நவ்லக் மற்றும் கிளை பொருளாளர் சகோ. கனி, கிளை முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மூன்றாவது வாரம் ஹஜ் பயணிகளுக்கான மாபெரும் இரத்த தான முகாம் உள்ளதால், வழக்கமாக மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை நடக்கும் அஜீசியா கிளை நிகழ்ச்சி, இரண்டாவது வெள்ளிக்கிழமையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மண்டலத் தலைவர் சகோ. ஃபெய்ஸல் “தனித்து விளங்கும் தவ்ஹீத் ஜமாஅத்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மற்ற ஜமாஅத் – இயக்கங்களில் இருந்து நமது ஜமாஅத் எவ்வாறெல்லாம் தனித்து நிற்கின்றது என்பதையும், குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ரசூல் (சல்) அவர்களின் சுன்னா மட்டுமே நமது நிலைபாடு என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கினார்.
இதனை அடுத்து, மண்டல துணைத் தலைவர் சகோ. நிஜாம் அவர்கள் “நமது ஜமாஅத் மூலம் மக்களிடையே அறிமுகமானவர்களில் பலர், தங்களால் தான் இயக்கமே செயல்படுகிறது; தாங்கள் இல்லாவிட்டால் இயக்கமே இருக்காது என்று இறுமாந்து உள்ளனர். அவர்களை மக்கள் அடையாளம் கண்டு தூக்கி எறிய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு, கிளைத் தலைவராக இருந்த “கடையநல்லூர் ஓட்டை இஸ்மாயில்”, கிளை செயலாளராக இருந்த “கடையநல்லூர் அஹமது கபீர்” ஆகியோரின் ஜமாஅத் விரோத நடவடிக்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
அதனை அடுத்து, இரட்டை வேடமிட்டுக் கொண்டிருந்த அவ்விருவரையும், கிளையின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்க வேண்டும் என அஜீசியா கிளை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.
ஜமாஅத் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அஜீசியா கிளை குறித்தும், மாநில நிர்வாகம் குறித்தும் தவறான தகவல்களை பரப்பிய அவ்விருவரையும் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க மாநிலத்திற்கு பரிந்துரைப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
நீக்கப்பட்ட இருவருக்கு பதிலாக, கிளை நிர்வாகிகள் தேர்வினை சகோ. ஃபெய்ஸல் நடத்தினார். ஹஜ் பெருநாளுக்காக கிளை நிர்வாகிகள் பலரும் தாயகம் சென்றிருப்பதால், அவர்கள் திரும்பி வந்து புதிய நிர்வாகம் சீர்படுத்தப்படும் வரை கீழ்க்கண்ட 5 பொறுப்பாளர்கள் கிளை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
எஸ். கனி – மதுரை – 0505716617 பாட்சா – பவுஞ்சிப்பட்டு – 0502480928 நைனார் – தொண்டி – 0533986219 ரஃபீக் – திருப்பந்துருத்தி – 0550629123 அக்பர் – திருச்சி – 0535347823
ஒரே நாள் அறிவிப்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தனி நபர்களின் சலசலப்புகளுக்கு ஆட்படாமல், ஜமாஅத் செயல்பாடுகளை முன்னை விட சிறப்பாக செய்வோம் என்ற உறுதி மொழியுடன் கிளை உறுப்பினர்களும், நிர்வாகிகளும் துஆவுடன் கலைந்து சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
www.tntj.net

No comments: