கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 6, 2011

மாற்றுமத நண்பர்கள் அழைப்புப் பணி கடையநல்லூர் TNTJ அனைத்துக் கிளைகள்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் சார்பாக முஸ்லிம் அல்லாத மாற்றுமத சகோதர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு அதற்கான அழைப்புப் பணிகள் மிகச் சீரிய முறையில் நடைபெற்று வருகிறது.
இதற்காக அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு அதன் ஒரு புறத்தில் கட்டுரை போட்டி பற்றிய அறிவிப்பும் மற்றொரு புறம் ஓரிறைக் கொள்கைக்கான அழைப்பும் இடம்பெற்றுள்ளது. 
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் கொள்கைச் சகோதரர்கள் அணி அணியாகச் சென்று முஸ்லிம் அல்லாத நண்பர்களைச் சந்தித்து கட்டுரைப் போட்டியில் பங்கு பெறுவதற்கு அழைப்பு விடுக்கின்றனர். 
அடிமட்டத்தில் உள்ள அன்பர்கள் முதல் வங்கி மேலாளர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள், மாணவர்கள் என்று பல்வேறு நிலைகளில் உள்ள முஸ்லிம் அல்லாத நண்பர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஏகத்துவ அழைப்பும், கட்டுரைப் போட்டியில் பங்கு பெறுமாறு அழைப்பும் வழங்கப்பட்டது. 
முஸ்லி்ம் அல்லாத நண்பர்களைச் சந்தித்து அவர்களுக்கு அழைப்பிதழ்களை வழங்கும் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை பற்றி அவர்கள் கூறிய பாராட்டுகள் நம்முடைய சகோதரர்களின் உள்ளங்களை நெகிழ வைத்தது.
ஜமாஅத்தில் இருந்து கொண்டே கருவறுத்த துரோகிகளுக்கு மத்தியில் அல்லாஹ் இந்த ஜமாஅத்தை எந்த அளவிற்கு கண்ணியப்படுத்தியுள்ளான் என்று தங்களுடைய அனுபவங்களை கொள்கைச் சகோதரர்கள் தங்கள்மத்தியில் பரிமாறிக் கொண்டனர். 
கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனித்துவம் பெற்ற பிறகு கொள்கைவாதிகளும் தனித்துவம் பெற்று வருகின்றனர். ஓலைக் குடிசையில் இருந்தாலும் ஏகத்துவப் பிரச்சாரம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். 

















No comments: