அல்லாஹ்வின் அருளால் அமீரக கடையநல்லூர் TNTJ சகோதரர்களின் ஆலோசனைக் கூட்டம் 17.02.2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கஸில் வைத்து மக்ரிப் தொழுகைக்கு பின் TNTJ துபை மண்டல இணைச் செயலாளர் சகோ.ஹக்கீம் சேட் அவர்களின் முன்னிலையில் பொறுப்பாளர் சகோ.சிராஜுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சகோ.இஸ்ஹாக் அவர்கள் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் ஆற்றிவரும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விளக்கி,கிளைகளுக்கு பொருளாதார ரீதியிலான நமது பங்களிப்பை செய்வது குறித்து விளக்கினார். சகோ.ஷேக் தாவூத் அவர்கள் பேட்டை பகுதியில் பெண்களுக்கான சிறப்பு தஃவா குறித்தும்,பேட்டை TNTJ மர்கஸ் செயல்பாடு குறித்தும் பேசினார்.இறுதியில் சகோ.சிராஜ் அவர்கள் வரவு செலவு மற்றும் சந்தா குறித்த அறிக்கை தாக்கல் செய்தார்.சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment