கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 14, 2012

அமீரகத்தில் நடந்த ஆலோசனை கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடந்த வெள்ளிகிழமை(13-7-12 )மாலை 6.00 மணி அளவில்  துபாய் மர்கசில் வைத்து நடைபெற்றது, பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சகோ இப்ராகிம் அவர்கள் "ரமலானில் நம்முடைய செயல்பாடுகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அதனை தொடர்ந்து கடந்த மாத கூட்டத்தில் நிறைவேற்றிய  தீர்மானங்கள் பற்றிய பார்வை செய்யப்பட்டது,

அதன் பின்பு இந்த மாத செயல் திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்க பட்டது,

ஆலோசனைகள் :

1) மெகா டி வியில் வருகின்ற ரமலான் மாதத்தில் ஒளிபரப்பப்படும் "மனகுழப்பத்திற்க்கு இஸ்லாம் கூறும் மகத்தான தீர்வு " என்ற நிகழ்ச்சிக்கு வாழ்த்தும் நெஞ்சங்கள் விளம்பரத்தில் பங்கு கொள்ளவது பற்றியும், அதற்காக சில சகோதர்கள் ஆலோசனை செய்து தெரிவிக்கிறோம் என்று கூறினார்கள்,

2) கடையநல்லூரில்  மக்கள் சந்திப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் குர்ஹான் ,ஹதிஸ்கள் எழுதுவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டு சுமார் 20 வீடுகளின் சுவர்களில் எழுதுவதற்கு ஆகும் செலவை சில சகோதர்கள் ஏற்று கொண்டு இன்னும் சில சகோதர்கள் இதில் பங்களிப்பு செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள்,

3) நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பேரித்தம் பழம் வழங்குவதற்கு அமீரகத்தில் உள்ள சகோதர்கள் பேரித்தம் பழம் தருவதாகும் அதனை அனுப்புவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது,
  
தீர்மானங்கள்:

1) பித்ரா வசூல் சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் அந்த அந்த பகுதியில் உள்ள சகோதர்கள்  தெரிந்த சகொதர்களிடம் வசூலித்து வழங்குவது என்றும் ,

2) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வரும் இப்தார் விருந்து, வருகிற  ரமாலானில் 10-8-12 அன்று துபாய் JT மர்கசில் வைத்து நடத்துவது என்று தீர்மானிக்கபட்டது.
 
                                               "துவா"வுடன் கூட்டம்  நிறைவு பெற்றது


இப்படிக்கு

அமிரக வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்கள்

No comments: