கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jul 15, 2012

கொள்கை சகோதரர்களுக்கு

அஸஸலாமு அலைக்கும்
 கடையநல்லூர் கொள்கை சகோதரர்களுக்கு!

இந்த வருட புனித ரமலானின் நோன்பை எதிர்நோக்கியுள்ள அனைத்து சகோதரர்களுக்கும்  அந்த நோன்பு நோற்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும், அதனால் ரையான் எனும் சொர்க்கச்சோலையை மறுமையில் அடையவேண்டும் என்றும் பிராத்திக்கிறோம்.

நமது ஊரில் இயங்கிக் கொண்டிருக்கும் TNTJ- கடையநல்லூர் கிளைகளின் பள்ளிவாசல்களில் கடந்த வருடம் போல் இந்த வருடமும் நோன்புக் கஞ்சி காய்ச்சி நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஒருகஞ்சிக்கு ஆகும் செலவை நிர்ணயித்து உள்ளார்கள். இந்திய ரூபாய்க்கு இரண்டாயிரத்து ஐநூறு என்று நமக்கு தகவல் தந்துள்ளார்கள். அதன்படி சவுதிரியால் 180 என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள சகோதரர்கள் இதில் பங்கு கொண்டு நபிமொழியின் அடிப்படையில் ரமலானில் நாம் செய்யும் அனைத்து நற்காரியங்களுக்கும் பத்திலிருந்து ஏழுநூறு நன்மைகளை பெற்று அதன் பயனை மறுமையில் பெற்றுக் கொள்வோமாக!

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், இஸ்லாமி(ய பண்புகளி)ல் சிறந்தது எது? என்று கேட்டார்கள். நீர் உணவளிப்பது, அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் சலாம் கூறுவதாகும். என்று இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
நூல்-புகாரி, அத்தியாயம்:1, ஹதீஸ் 28.
இந்த மின் அஞ்சல் மூலமும் தெரியப்படுத்தலாம்.

கஞ்சிக்காக நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்
அப்துல் பாசித்- 0541960060
அல் அமீன்- 0543174391
சி்த்தீக் - 0509419349
கவுஸ் முகம்மது -0501805861
அப்துல் காதர் - 0556119908


-- பொருப்பாளர்கள்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*

ஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பு

No comments: