கடையநல்லூரில் வைக்கப்பட்டுள்ள மார்க்க மற்றும் சமுதாய விழிப்புணர்வு பதாகைகள்!
"நபி ஸல் கூறினார்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக அல்லாஹ் ஒருவரை நேர்வழியில் செலுத்துவது (அரபுகளின் மிக உயர்ந்த சொத்தான) சிகப்பு ஒட்டகங்களை (தருமம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.(நூல் : புகாரி 3009, அறிவிப்பாளர் ஸாகல் ஸாத் (ரலி)
1985 க்கு பிறகு தமிழகத்தில் ஏற்படுத்திய தவ்ஹீத் புரட்சி தமிழ் முஸ்லிமகள் மத்தியில் மார்கத்தின் பெயரால் நடைபெற்ற சமுக தீமைகள் பற்றி மாபெரும் ஒரு விழிப்புணர்வை ஆண்கள்,பெண்கள் என்ற நிலையில் படித்தவர்க,ள் படிக்காதவர்கள், மாணவர்கள் என்று எல்லா தரப்பு மக்களிடமும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.

அதன் தொடர்ச்சி கடையநல்லுரையும் விட்டுவைக்கவில்லை. கடையநல்லூரில் வட்டி , வரதட்சனை, மோசடி, மூடநம்பிக்கை,ஆடம்பர திருமணம், தர்கா வழிபாடு, விபசாரம், பெண்களின் செல்போன் கலாசாரம், பெற்றோர்களை கைவிடுதல் இப்படி எண்ணற்ற சமுக மற்றும் மார்க்கத்தின் பெயரால் நடைபெறும் தீமைகளை கடந்த சுமார் 27 ஆண்டுகளாக மாபெரும் பிரசாரத்தை பல்வேறு வழிகளில், அதாவது பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம், பிரசுரங்கள், தனிநபர் சந்திப்பு, பெண்கள் பயான்கள், தெருமுனையில் மார்க்கம் சம்பந்தமாக நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சிகள், இப்படி எண்ணற்ற வழிமுறைகளில் மக்களிடம் விளிபுணர்வுகளை செய்துவருகிறது தமிழ் நாடு தவ்ஹீத் ஜாமாத்.
இன்றைய நவீன முறையில் இத்தகைய சமுதாய விழிப்புணர்வுகளை கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும் என்ற உக்தியை கையில் எடுத்தது, அதன் தொடர்ச்சியாக இன்றைய நவீன முறையான டிஜிட்டல் பேனர் என்ற வழிமுறையை கையில் எடுத்துள்ளது. இன்று எத்தனையோ அரசியல் மற்றும் சமுதாய அமைப்புகள், தாங்கள் தலைவர்களின் வருகைக்காக வருக! வருக !! என்ற ஆள் உயர பேனர்களுக்கு,திருமண வரவேற்ப்பு பேனர்களுக்கும் ஆயிரக்கணக்கில் பணத்தினை சிலவு செய்து வரும் வேளையில், சமுகத்தில் உள்ள இந்த சமுகதீமைகளை களையவேண்டும் என்ற அடிபடையில கடையநல்லூர் முழுவதும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மின்கம்பங்கள், வீடுகளின் சுவர்கள் ஆகியவற்றில் சிந்தனையை தூண்டும் விழிப்புணர்வு வாசகம் மற்றும் கருத்து படங்களுடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
அவைகளின் ஒரு சில புகைபடங்கள் இணையதள வாசகர்களின் பார்வைக்கு தருகிறோம், இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,
" மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.(13:11)

No comments:
Post a Comment