கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 25, 2012

ஹஜ்ஜுபெருநாள் கூட்டுக்குர்பானி ஆலோசனை கூட்டம்


 24.09.2012 அன்று மஃரிப் தெழுகைக்கு பிறகு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகள் சார்பாக  ஹஜ்ஜுபெருநாள் கூட்டுக்குர்பானி பற்றிய ஆலோசனை கூட்டம்  கடையநல்லூர் பேட்டை கிளையில் வைத்து நாடைபெற்றது.

இக்கூட்டம் பேட்டை கிளை தலைவர் சகோ. அப்பாஸ் அவர்கள் தலைமையில் அலோசனை கூட்டம் ஹஜ் பெருநாள் மற்றும் கூட்டுக்குர்பானி விபரமாக நடைபெற்றது  கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கீழ் கண்ட விபரங்கள் ஆலோசிக்கப்பட்டு எல்லா கிளைகளிலும் கீழ் வருமாறு செயல்படுவது என்று தீர்மானிக்கபட்டது.

அதன் படி .....,


01. கூட்டுக்குர்பானி மாடு பங்கு ஒன்றுக்கு Rs 2000 இந்திய ரூபாய் என்றும்,

02. ஆடு வகைக்கு ஆடு பிடிக்கும் அன்று உள்ள மார்க்கெட் விலையே நிர்ணயிப்பது,

03. இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் மக்கள்ளுக்கு கூட்டுக்குர்பானி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வாரத்திற்குள் பள்ளிகளில்  விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகிப்பது, அடுத்த வாரத்தில் வீடு வீடாக வினியோகிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

04. கூட்டக்குர்பானி திட்டத்தில் சேர்கின்ற நபர்களுக்கு 10 கிலோ இறைச்சி  விகிதம் கொடுப்பது என்றும், மீதி உள்ள  இறைச்சி ஏழைகளுக்கு வினியோகிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

05. தோல் மூலம் கிடைக்கும் பணத்தை உடனடியாக ஏழைகளுக்கு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது

06. மாடு பிடிக்கும் போது அதன் தரம் மற்றும் தகுதி அறிய  கிளை செயலாளார்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.தூவாவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.



No comments: