கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 5, 2012

TNTJ பேட்டை கிளையின் சார்பாக நடைபெற்ற தர்பியா!

 04.11.2012 அன்று TNTJ பேட்டை கிளையின் சார்பாகதிட்டமிட்டபடி தர்பியா என்னும் நல்லொழுக்க பயிற்சி முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சி நிரழில் குறிப்பிட்டபடி பேட்டை கிளையின் தலைவர் சகோ.அப்பாஸ் அவர்களின் தலைமை உரையுடன் காலை சரியாக 10மணிக்கு கூட்டம் தொடங்கியது. மாவட்ட நிர்வாகி சகோ அச்சன்புதூர் சுலைமான் அவர்கள் முன்னிலை வகித்தார்.
 சகோ.அப்துன் நாசர் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டார் 10.05 முதல் 11 மணிவரை சகோ. அப்துன் நாசர் அவர்கள் தொழுகை பயிற்சி வகுப்பு நடத்தினார்கள் ஓழு செய்வதில் இருந்து ஆரம்பித்து சலாம் கூறுவது வரை மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் செயல்முறை பயிற்சி நடத்தினார். சரியாக 11 மணிக்கு சகோ.அப்துல் நாசர் தங்களுடைய உரையே நிறைவு செய்யவும் வருகை தந்து இருந்த சகோதரர்களின் வேண்டுகோள்க்கு இணங்க 15 நிமிடங்கள் கேள்வி பதில்க்கு ஒதுக்கப்பட்டது
சகோதரர்கள் ஆர்வமாக கேள்விகள் கேட்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டது.
 அதன் பின்னர்  11.15 மணிக்கு க்கு சகோதரர் யூசுப் அவர்கள் "TNTJ ம் பிற இயக்கங்களும்" என்ற தலைப்பில் மிகவும் பயன் உள்ள இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு தேவையான அவர்களின் சந்தேகங்களை நீக்கும் விதமாக மிக அருமையான நிகழ் உரை நடத்தினார்கள், சகோதரர்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் உனரயை கேட்டு பயன் அடைந்தார்கள்.
  சகோதரர் சம்சுல் லுஹா அவர்கள் மதியம் 12.30 மணி முதல் 1.45 மணிவரை "திருமண நிலைபாடு" என்ற தலைப்பில் இன்றைய கால கட்டத்துக்கு தேவையான பயன் உள்ள உரை நிகழ்த்தினார்.
 இறுதியாக பேட்டை கிளை பொருளாளர் சகோ.ரஹ்மத்துல்லா அவர்களின் நன்றிரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது . லுஹர் தொழுகைக்கு பிறகு மதிய விருந்துடன் மன நிறைவுடன் ஏக இறைவனுக்கு நன்றி கூறி இனிதே நிறைவுற்றது, இந்த பயிற்சி முகாம் பேட்டை கிளை சார்பாக நடத்தப்பட்டாலும் அனைத்து கிளை சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் TNTJ பேட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்












No comments: