விறகு சுமப்பவள் என்பதின் கருத்து என்ன?
ஹம்மா லதல் ஹதபும் கடைந்தெடுத்த பொய் கதைகளும்
அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் ஹம்மா லதல் ஹதப் - விறகு சுமக்கிற அவனது மனைவியும் நரகில் கருகுவாள் என்று சொல்லுகிற இந்த வசனத்திற்கு ஒரு கதையை அடித்துவிட்டார்கள்.
அபூலஹபின் மனைவி விறகு வெட்டி சம்பாதித்ததாகவும், அப்படி ஒருநாள் விறகுக் கட்டை கயிற்றினால் கட்டிக் கொண்டு வரும்போது, விறகுக் கட்டு சாய்ந்து அதிலுள்ள கயிறு அவளது கழுத்தில் சுற்றி அவள் கழுத்து நெறிந்து முறிந்து செத்துவிட்டாள் என்று கதையளந்து விட்டுள்ளார்கள். இந்தக் கதை பொய் என்பதற்கு இந்த அத்தியாயத்தின் மேலுள்ள வசனத்தையே தகுந்த ஆதாரமாகக் கொள்ளலாம்.
அபூலஹப் பெரிய பணக்காரன் என்பதை அதாவது காசுபணமுள்ளவன்,
பசையுள்ளவன் என்ற சொல் மூலம் அல்லாஹ் சுட்டிக் காட்டி விட்டான். பணக்காரனுக்கு மனைவியாக இருப்பவள் எதற்காக விறகு சுமக்க வேண்டும்?இது பொய்யானது என்பதை மேலுள்ள வசனமே நமக்குக் காட்டிக் கொடுக்கிறது. விறகு சுமப்பவள் என்பதற்கு நேரடியாக விறகு சுமப்பது என்று இருந்தாலும், இலக்கியமாக அல்லாஹ் இந்த வசனத்தில் பயன்படுத்துகிறான். விறகு சுமப்பவளுக்குப் பொருள், கோள் மூட்டுகிறவள் என்று அர்த்தம். அதாவது கோள் மூட்டுகிறவன், பிறரை உசுப்பிவிடுகிறவன், சிண்டு முடிந்துவிடுகிறவன் போன்றவர்களைக் குறிப்பதற்கு அரபியில் இலக்கியமாகப் பயன்படுத்துவார்கள். விறகு சுமப்பது என்றால், இலேசாக தீ பற்றி எரிகிற இடத்தில் விறகைக் கொண்டுபோய் போட்டால் இன்னும் தீ நன்றாக எரியும். ஏற்கனவே எறிந்து கொண்டிருக்கிற தீயில் விறகையோ பெட்ரோலையோ மண்ணெண்ணையோ கொண்டு ஊற்றினால் அது மென்மேலும் சுடர் விட்டு எரியும். இப்படி எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதைப் போல் என்றெல்லாம் நாம்கூட பழமொழி சொல்லுகிறோமே அதைப் போன்றுதான் கோள் மூட்டுவதை அரபியில் ஹம்மா லதல் ஹதப் என்று சொல்லுவார்கள்.
அதாவது முஹம்மத் நபியவர்களின் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக முஹம்மது நபிக்கு எதிராக ஆட்களைச் சூடேற்றிவிடுவதற்காக ஆட்களை உசுப்பிவிடுவதற்காக வீடுவீடாகச் சென்று, இந்த முஹம்மத் எனது மகன்தான். இவனது போக்கு சரியில்லை எனவே இவனது பேச்சைக் கேட்காதீர்கள், அவனுக்குப் பின்னால் போகாதீர்கள் என்று மக்களை முஹம்மது நபிக்கு எதிராகத் தூண்டிவிடுவதைத்தான் அல்லாஹ் "ஹம்மா லதல் ஹதப்" என்று இலக்கியமாகச் சொல்லுகிறான்.
இன்னும் சொல்லப் போனால் நமது பேச்சுக்கும் அல்லாஹ்வின் பேச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அல்லாஹ் எதை அனுமதித்து இருக்கிறானோ அதை அவனே விமர்சித்து தவறாக சித்தரித்துப் பேசமாட்டான். எனவே பழித்து ஒரு வாசகத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால் அது பழிப்புக்குரிய செயலாக இருக்கவேண்டும் என்பதையும் பலர் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர்.மனிதன் கூட இப்படிப் பேசாத போது இறைவனது வார்த்தையை தப்பும் தவறுமாகப் புரிந்துவிடக்கூடாது. இது இறைவனது பேச்சிற்க்குரிய தன்மையாகும்.
விறகு சுமப்பது பாவமான காரியமா? விறகு சுமந்து ஒருவன் சம்பாதித்தால் அவனைக் கேவலப்படுத்துவது சரியா? அவனது உழைப்பை உதாசீனப்
படுத்துவது நியாயமா? முதலில் இப்படியெல்லாம் கேவலப்படுத்தி இஸ்லாம் சொல்லுமா? மனிதன் வேண்டுமானால் அறியாமையின் காரணமாகவும் பெருமைக்காவும் பகட்டுக்காகவும் பந்தாவிற்காகவும் இப்படி சொல்லலாம். ஆனால் அல்லாஹ்வோ ரசூலோ அப்படி எந்த உழைப்பையும் உதாசீனப்
படுத்த மாட்டார்கள்.ஏனெனில் விறகு சுமப்பது என்று தவறாக விளங்கினால் விறகு சுமப்பது தவறான செயலைப் போன்று பதிவாகிவிடும். எனவே குர்ஆனுக்கு விரிவுரை எழுதியவர்கள் மார்க்கத்தில் சொல்லப்படுகிற பல்வேறு செய்திகளை மறந்துவிட்டு அல்லது மறுத்துவிட்டு விரிவிரை எழுதக்கூடாது. கட்டுக் கதைகளையும் கப்ஸாக்களையும் குர்ஆனுக்கு விரிவுரை என்ற பெயரில் ஆதாரமில்லாமலும் சொந்த யூகத்திலும் அடித்துவிடக்கூடாது. உதாரணத்திற்கு, ஒருவரைத் திட்டுவதைப் போன்று குறைசொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு, "இவர் நன்றாக பிரியாணி சாப்பிடுவார்'', "இவர் தினமும் புதுப்புது சட்டை அணிவார்'' என்று சொன்னால், அது திட்டுவதில் அடங்காது. பிரியாணியை நன்றாக சாப்பிடுவது நல்லதுதானே! அதுபோன்று தினமும் புதுப் புது சட்டை அணிவது கெட்ட செயல் இல்லையே! பிறகு எதற்கு இதை ஒரு குறையாகச் சொல்ல வேண்டும்? என்று குறை சொன்னவரைத்தான் ஒருமாதிரியானவர் என்று நினைத்துக் கொள்கிறோம். புதுப்புது சட்டை அணிவதில் என்ன தவறு இருக்கிறது என்று குறை சொன்னவரிடம் கேட்கத்தான் செய்வோம். "இவர் சூதாடுகிறார்'', "இவர் ஏமாற்றுபவர்'' என்றெல்லாம் சொன்னால் அதில் திட்டுவது அடங்கியிருக்கிறது. நபியவர்கள் மக்களிடம் யாசகம் கேட்பதை விட விறகுக் கட்டை முதுகில் சுமந்து, விற்று வாழ்க்கை நடத்தவது சிறந்தது என்று சிலாகித்துச் சொல்-லியுள்ளார்கள். விறகு சுமந்தாவது உழைக்க வேண்டும் என்று நபியவர்கள் பாராட்டியுள்ளார்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவருக்கு இழிவு ஏற்படாமல் தடுத்துவிடுவான். மக்கள் அவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.
அறிவிப்பவர்: ஸுபைர் பின் அல்அவ்வாம் (ர-லி), நூல் : புகாரி 1471,2373
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தமது கயிற்றை எடுத்துக்கொண்டு(போய்) விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-லி), நூல்: புகாரி 1470.1471,2373,2374
இந்த வசனம் உட்பட இந்த அத்தியாயத்தின் துவக்கத்திலிருந்தே குறைகளைத் தான் பட்டியல் போடுகிறான். ஆரம்பமே தப்பத் - நாசமாகட்டும் என்று கடுமையாகச் சொல்-லிக் கொண்டே வரும்போது விறகு சுமப்பவள் என்று சொல்வது திட்டுவதாக அமையுமா? விறகு யார்தான் சுமக்காமல் இருக்கிறார்? விறகு சுமப்பது கேவலமானதா? அது பாவமாகக் கருதப்பட வேண்டுமா? அது அவமானத்திற்குரிய செயலா? இஸ்லாத்தில் இப்படியெல்லாம் உண்டா?
இஸ்லாமியர்களல்லாத சில மதத்தவர்கள் தொழில் அடிப்படையில் சாதியையும் வர்ணத்தையும் பிரிக்கின்றனர், ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை பிச்சை எடுக்காமல் சுயமரியாதையுடன் எந்தத் தொழில் செய்து பிழைத்தாலும் அதைப் பாராட்டத்தான் செய்கிறது. எனவே அபூலஹபின் மனைவியாக இருக்கிறவள், விறகு சுமக்கிற அளவுக்கு அவளுக்கு வறுமை ஏற்படவில்லை என்பதையும் பார்க்கிறோம்.
அவளுக்கும் அவளது கணவன் அபூலஹபிற்கும் அவர்களுடைய பொருளாதாரம் அவர்களுக்கு உதவவில்லை என்று சொல்லுகிற அளவிற்கு அல்லாஹ் தாறுமாறான பொருளாதாரத்தைக் கொடுத்திருக்கத்தான் செய்திருந்தான். அதன் காரணமாக இவன் தனது மனைவி விறகு பொறுக்கித்தான் குடும்பம் நடத்த வேண்டும் என்கிற தேவையும் இவனுக்கு இருக்கவில்லை என்பதையும் பார்க்கிறோம்.சரி ஒரு வாதத்திற்குப் பேசுவதாக இருந்தால் கூட, விறகு சுமந்தால் நரகத்திற்குப் போக வேண்டுமா? இப்படியெல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் வசனத்திற்குரிய சரியான பொருளைப் புரிந்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் இந்த வசனத்தைப் பேசுவது நீங்களோ நானோ கிடையாது. எந்த மனிதனின் வார்த்தையும் கிடையாது. மனிதர்களைப் படைத்துப் பரிபக்குவப்படுத்துகிற இறைவனின் வார்த்தையாகும். அந்த வார்த்தைகளைப் படைத்தவன் பேசுகிற மாதிரித்தான் சரியான பொருளை விளங்கிட வேண்டும். அப்படியெனில் விறகு சுமப்பதினால் நரகத்திற்குச் செல்வாள் என்பதற்கு வேறு பொருள் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. விறகு சுமப்பது என்றால் இவ்விடத்தில், நபிகள் நாயத்திற்கு எதிராக மூட்டிவிடுகிற தீயை இன்னும் கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்காக விறகைப் பொறுக்கிக் கொண்டுவந்து கொடுத்ததால் அது நபிக்கு எதிராகச் செயல்பட்டதினால் நரகத்தில் கரிவாள் என்று அல்லாஹ் சொல்லுகிறான். அப்படியெனில், எதிர்ப்பு என்ற நெருப்பை மூட்டுவதற்கு விறகை சுமக்கிறாள்
என்று அர்த்தம். எனவே இவ்விடத்தில் விறகு என்றால், நபிகள் நாயத்தின் மீது கட்டவிழ்த்துவிட்ட பொய்கள், வதந்திகள், தவறான பிரச்சாரங்கள் என்று பொருள் வைக்க வேண்டும்.
இந்த வசனத்திற்குரிய விளக்கமாக இன்னொரு விசித்திரமான விளக்கத்தையும் சில விரிவுரை நூல்களில் சொல்லி இருக்கிறார்கள். அதாவது அபூலஹபின் மனைவி விறகு சுமந்து பிழைக்கும் நிலையில் இருக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் நபிகள் நாயகம் (ஸல் )அவர்களின் வறுமையைக் கேலி செய்வதற்காக் அவள் விறகு சுமந்து நடித்துக் காட்டினாள் என்பதே அந்த விளக்கம்.இப்னு கதீர் போன்ற தப்ஸீர்களில் கூட இதை எழுயிதிருக்கிறார்கள். இதுவும் கூட பொய்தான். நபியவர்கள் மக்காவில் தம்மை இறைத் தூதர் என்று தமது நாற்பதாவது வயதில் அறிமுகம் செய்யும்போது தன்னிறைவான பெரிய பணக்காரராகத்தான் இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் ஊரிலேயே பெரிய பணக்காரராகத்தான் இருந்துள்ளார்கள். எனவே இந்தக் கதை முற்றிலும் பொய்யானது என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
இந்தக் கதைபோன்று, இன்னொரு கதையும் உண்டு. அதில், அபூலஹபின் மனைவி எவ்வளவு பணக்காரியாக இருந்தாலும் கஞ்சம் பிடித்தவளாக இருந்தாள். அதனால்தான் அல்லாஹ் இப்படி பழித்துச் சொல்லுகிறான்
என்றும் எழுதி வைத்துள்ளார்கள். இந்த வாதமும் தவறானதுதான். ஒருவன் பெரிய இலட்சாதிபதியாகவும் கோடீஸ்வரனாகவும் இருக்கிறான். தன்னிறைவாகத்தான் இருக்கிறான். இருந்தாலும் நியாயமான முறையில் மேலும் உழைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதனை எப்படித் தவறானது என்று சொல்ல முடியும்? எனவே அவள் பணக்காரியாக இருந்தாலும் விறகு விற்பது என்ற ஹலாலான இஸ்லாம் அனுமதித்த தொழிலைத்தானே செய்திருக்கிறாள். இது விமர்சித்துச் சொல்லுகிற அளவுக்கான விசயமாக இல்லையே என்று யோசித்திருந்தாலும் இதுபோன்ற கதைகளைச் சொல்லி-யிருக்க மாட்டார்கள். எனவே இந்தக் கதைகளையெல்லாம் நம்பக்கூடாது.
எனவே விறகு சுமப்பவள் என்பதற்குரிய சரியான பொருள், நபியவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டவள் உசுப்பேற்றிவிட்டவள் என்று பொருள். நபியவர்களுக்கு எதிர்ப்பைத் தூண்டிவிடுவதற்குத் துணையாக நின்றவள் என்று அர்த்தம் செய்தால்தான், அப்படித் தூண்டிவிடுவது நரகத்திற்குரிய காரியமாக இருக்கும் என்பது நியாயமாகும்.ஆக விறகு சுமப்பவள் என்பதற்கு இரண்டு அர்த்தம் இருக்கிறது. ஒன்று நேரடியாகவே விறகு சுமப்பது என்றும் மற்றொன்று நபியவர்களுக்கு எதிராக எதிர்ப்பைத் தூண்டிவிடுவது அல்லது தூண்டுவதற்குத் துணை நிற்பது என்றும் அர்த்தம் செய்யலாம். நேரடியாகவே விறகு சுமப்பது என்று அர்த்தம் வைப்பதற்கு இவ்விடத்தில் சிறிதளவிற்குக் கூட முகாந்திரம் இல்லை. ஆரம்பத்திலிருந்து திட்டுகிற சபிக்கிற தோரணையில் பேசிவிட்டதினால், விறகு சுமப்பதைத் திட்டுவதாக சபிப்பதாகக் கருதமுடியாது. விறகு சுமப்பதை அப்படியே நேரடிப் பொருளிலும் சொல்லலாம். அதனால் தவறொன்றுமில்லை. ஆனால் அது அவ்விடத்தில் பொருந்திப் போகவேண்டும்.
உதாரணத்திற்கு ஒருவர் வருகிறார். இன்னொருவர் அவரது தொழில் என்னவென்று கேட்கிறார். அதற்கவர், இவர் விறகு சுமப்பவர் என்று சொன்னால் அது நேரடிப் பொருளில் பயன்படுத்துவதற்கான இடமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துச் சொல்லவே முடியாது. அதேபோன்று ஒருவர் காரிலிருந்து இறங்குகிறார். ஐந்து விரல்களிலும் மோதிரம் அணிந்திருக்கிறார். கழுத்தில் பெரிய அணிகலன்ண்கள் எல்லாம் அணிந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பற்றி ஒருவர் நம்மிடம் கேட்கும் போது, அவன்தான் விறகு வெட்டுகிறவன் என்றோ அல்லது அவன்தான் விறகு சுமப்பவன் என்றோ பதில் சொல்லுகிறோம் என்றால் அதில் வேறேதோ பொடி இருக்கிறது என்று அர்த்தம். இந்த இடத்தில் நேரடியான பொருள் இல்லை. வேறேதோ இவரைப் பற்றிச் சொல்லுகிறார் என்று பொருள். அதுபோன்றுதான் இந்த வசனத்திலும் விறகு சுமப்பவள் என்றால் நேரடி அர்த்தத்தில் கிடையாது. அந்த அர்த்தம் அபூலஹபின் மனைவிக்குப் பொருந்தவே பொருந்தாது. இலக்கியமான பொருளில்தான் அல்லாஹ் பயன்படுத்துகிறான். எனவே இவள் விறகு வெட்டுகிறவள் என்பதை வேறுவிதமான பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதனால்தான் அல்லாஹ் அடுத்த வசனத்தில், فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ - ஃபீ ஜீதிஹா ஹப்லுன் மின் மஸத் - அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய கயிறு இருக்கிறது என்று கூறுகிறான். இந்த வசனத்திலும் இலக்கியமான பொருள்தான் உள்ளது. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய கயிறு இருக்கிறது என்றால், அழிவு ஏற்படும் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். கழுத்தில் முறுக்கேறிய கயிறு என்றால் இலக்கியமான வார்த்தையாகும். நம்முடைய நடைமுறைப் பேச்சில் கூட இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்குச் சொல்வதாக இருப்பின், சில மாணவர்கள் ஆசிரியருக்குத் தெரியாமல் படத்திற்குச் சென்றுவிடுவார்கள். அவர் செய்த இந்தத் திருட்டுக் காரியம் தெரியவந்துவிடுமானால், அவருடன் படிக்கிற மற்ற மாணவர்கள், "இன்றைக்கு உனக்கு கழுத்தில் சுருக்குத்தான் மாப்பிள்ளை'' என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். இவ்விடத்தில் சுருக்கு என்றால் தண்டனை என்று அர்த்தம். இப்படி பயன்படுத்துவது எல்லா மொழிகளிலுமே இருக்கத்தான் செய்கிறது. அதே போன்றுதான் இந்த வசனத்தினுடைய பொருளையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இவளது கழுத்திலும் முறுக்கேறிய கயிறு இருக்கிறது என்றால், இவளுக்குத் தண்டனை இருக்கிறது. இவளது புருஷன் எப்படி நரகத்திற்குச் செல்வானோ அதுபோன்று இவளும் நரகத்திற்குத்தான் செல்வாள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதைத்தான் இந்த அத்தியாயம் சொல்லுகிறதே தவிர, இந்த உலகத்தில் நடக்கிற விசயத்தைச் சொல்லவே கிடையாது. அப்படியொரு பாரதூரமாக உலகத்தில் யாருக்குமே நடக்காத விசயம் இவர்களுக்கு நடக்கவும் இல்லை. எல்லோரும் செத்துப் போனதைப் போன்றுதான் இவர்களும் செத்துப் போனார்கள். அவ்வளவுதான். இந்தப் அபூலஹபினுடைய மனைவியான இவளும் நபியவர்களுக்குச் உறவினராகத்தான் இருந்தாள். முஆவியா (ரலி-) அவர்களின் தகப்பனார் அபூசுஃப்யான் ஆவார். அபூசுஃப்யானுடைய மகளை நபியவர்கள் மணமுடித்து இருந்தார்கள். அபூசுஃப்யானுடைய தந்தை பெயர் ஹர்ப் என்பதாகும். ஹர்புடைய மகள்தான் அபூலஹபுடைய மனைவி. அப்படியெனில் அபூசுஃப்யானுக்கு தங்கை முறை வருவதினால் நபியவர்களுக்கு அபூசுஃப்யான் மச்சான் என்கிற முறையும் வரும். நபியவர்களுக்கு மச்சானுடைய தங்கை முறை வருகிறது.
எனவே அபூலஹபும் அவனது மனைவியும் நபியவர்களின் இரத்த பந்தத்தில் உள்ளவர்களாக இருந்தும் கொள்கைக்கு எதிராக செயல்பட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். இதுதான் இந்த அத்தியாயத்திலுள்ள சம்பவம்.
நன்றி : ஆன்லைன் பி ஜே (http://www.onlinepj.com), DEC 2012 தீன்குல பெண்மணி

No comments:
Post a Comment