தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) கடையநல்லூர் அனைத்து கிளைகள் சார்பாக 29-12-12 அன்று மாலை 4:00 மணியளவில் கடையநல்லூரில் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி தமிழாசிரியரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பதிவு செய்து ஒய்வு பெற்ற ஆசிரியரின் மகன் V.K.முஹைதீன் பிள்ளை அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தும்,மேலும் மூன்று நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையை கண்டித்தும், முற்றிலும் இச்சட்டத்தை நீக்கக் கோரியும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் மணிகூண்டு அருகில் நடைபெற்றது.
கூட்டத்தில் அநீதிக்கு எதிரான கண்டன கோசங்களுடன் துவங்கி
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!!!
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!!
ஆர்பாட்டம் இது ஆர்பாட்டம்!
அநீதிக்கு எதிரான முஸ்லீம்களின் ஆர்பாட்டம்!!
வன்கொடுமை சட்டத்தை
தவறாக பயன்படுத்துவதை கண்டிக்கும் ஆர்பாட்டம்!!
பொய் வழக்கை புனைந்து போடும்
காவல்துறையை கண்டித்து ஆர்பாட்டம்!!
தீண்டாமையை குற்றம் என்று
கற்றுக் கொடுக்கும் ஆசான் மீதே
வன்கொடுமை தடுப்புச் சட்டம்
பாயுதே! பாயுதே!!
சாதி இன வேற்றுமைகள்
இல்லையென்று பறைசாற்றும்
இஸ்லாமியர் எங்கள் மீதே
தீண்டாமைச் சட்டத்தை
திணிப்பது நியாயமா??
காவல் துறையே! காவல் துறையே!!
கண்ணியம் இழந்த காவல் துறையே!!
முஸ்லீம்கள் என்ன கிள்ளுக் கீரையா?
விட்டில் பூச்சியாய் நினைத்தாயோ??
குண்டும்,ஜெயிலும்,குண்டாந்தடியும்
எங்கள் முன்னே தூள்! தூள்!!
பொறுமை எங்கள் குணமாகும்!
வறுமை எங்கள் நிலையாகும்!
சிறுமை படுத்திட நினைத்தாயானால்
சீறும் சிங்கமாய் மாறிடுவோம்!!
மாற்றுமத அன்பர்களை
பிறமத நண்பர்களை
கட்டித் தழுவும் சமுதாயமடா!!
கட்டியணைக்கும் சமுதாயமடா!!
சாதியின் பெயரால் வஞ்சம் தீர்க்கும்
சதிகாரர்கள் நாங்கள் இல்லை !!
இனிய மார்க்கம் இஸ்லாம் என்று
இணக்கமாய் வாழ வழிசொல்லும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) ஏற்பாடு செய்த இந்த கண்டன ஆர்பாட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து அநீதிக்கு எதிராக வேற்றுமையை மறந்து கடையநல்லூரில் உள்ள அனைத்து முஸ்லிம் ஜமாத்தகளும், இன்னபிற அமைப்புகளும் (போலி ஒற்றுமைவாதிகளை தவிர) ஒன்றிணைந்து ஆண்கள், பெண்கள் என்று எல்லா தரப்பினரும் அதிகமான அளவு கலந்து கொண்டு இந்த போராட்ட களத்தை வெற்றியாக்கி தந்தனர். தமிழகத்தில் வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களை காவல் துறை அச்சுறுத்துவது பற்றி அரசியல் மற்றும் சமுக அமைப்புகள் கவலை கொண்டுள்ள இந்த தருணத்தில், தமிழகத்தில் அதிலும் கடையநல்லூரில் இதற்கு எதிராக முதன் முதலில் பாதிக்கபட்டோருக்கு ஆதரவாக த த ஜமாத்தால் எல்லா முஸ்லிம் ஜாமாத் மாற்றும் அமைப்புகளையும் ஒன்றிணைத்து கண்டன ஆர்பாட்டம் ஏற்பாடு செய்து நடைபெற்று இருப்பது எல்லோரின் கவனத்தை திருப்பி உள்ளது.
மேலும் கூட்டத்தில் அதிகமான பத்திரிகை மற்றும் தொலைகாட்சி செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க வந்து செய்திகளை சேகரித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) கீழ் முஸ்லிம் ஜாமாத்கள் மாற்றும் அமைப்புகளும் கலந்து கொண்ட அநீதிக்கு எதிராக நடந்த இந்த ஆர்ப்பாட்டம் கடையநல்லூர் வரலாற்றில் ஒரு மைல் கல் என்று கூறலாம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒற்றுமைக்கு எதிரானது என்ற பொய்யான துவேச கருத்து தூள் தூளாக்கபட்டு, TNTJ சமுதயா ஒற்றுமையை என்றும் விரும்ப கூடியது என்பது பறைசாற்றபட்டது. இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை த த ஜ சார்பாக தெரிவித்து கொண்டது, இந்த ஆர்பாட்டத்தில் மேலும் வழக்கத்திற்கு மாறாக அதிகமான ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும், TNTJ தொண்டர் அணியினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
இன்ஷா அல்லாஹ் கூடுதல் படங்கள் விரைவில் .

இனியவர்கள் எங்கள் மீதே
இச்சட்டம் பாயுமோ! பாயுமோ!!
காவல்துறையே! காவல்துறையே!!
சட்டம், ஒழுங்கை காக்கும் துறையே!!
இது தான் உந்தன் இலட்சணமா??
கொலை,கொள்ளை,கற்பழிப்பு
கொடூரர்களை கட்டுப்படுத்த
வழியற்ற காவல்துறையே!!
வேறுவழி இல்லையென்றால்
வழக்குப் போட்டு கைது செய்ய
நாங்கள் தான் கிடைத்தோமா??
நாங்கள் தான் கிடைத்தோமா??
காவல் துறையே! காவல் துறையே!
ஏவல் துறையாய் இல்லாமல்
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டு!!!
போடாதே! போடாதே!!
பொய் வழக்குப் போடாதே!!
காவல் துறையே! காவல் துறையே!!
கண்ணியம் இழந்த காவல் துறையே!!
முஸ்லீம்கள் என்ன கிள்ளுக் கீரையா?
விட்டில் பூச்சியாய் நினைத்தாயோ??
குண்டும்,ஜெயிலும்,குண்டாந்தடியும்
எங்கள் முன்னே தூள்! தூள்!!
பொறுமை எங்கள் குணமாகும்!
வறுமை எங்கள் நிலையாகும்!
சிறுமை படுத்திட நினைத்தாயானால்
சீறும் சிங்கமாய் மாறிடுவோம்!!
மாற்றுமத அன்பர்களை
பிறமத நண்பர்களை
கட்டித் தழுவும் சமுதாயமடா!!
கட்டியணைக்கும் சமுதாயமடா!!
சாதியின் பெயரால் வஞ்சம் தீர்க்கும்
சதிகாரர்கள் நாங்கள் இல்லை !!
இனிய மார்க்கம் இஸ்லாம் என்று
இணக்கமாய் வாழ வழிசொல்லும்
வாபஸ் வாங்கு! வாபஸ் வாங்கு!!
போட்ட வழக்கை வாபஸ் வாங்கு!!
விடுதலை செய்! விடுதலை செய்!!
அப்பாவி ஆசிரியரை விடுதலை செய்!!
விடமாட்டோம்! விடமாட்டோம்!
விடுதலை செய்யும் வரை விடமாட்டோம்!!
அனுமதிக்க மாட்டோம்! அனுமதிக்க மாட்டோம்!
காவல்துறையின் கொடுமைகளை
இனியும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்!
மத்திய அரசே! மத்திய அரசே!
திரும்பப் பெறு! திரும்பப் பெறு!!
பழி தீர்க்க பயன்படும்
வன்கொடுமை சட்டத்தை
திரும்பப் பெறு! திரும்பப் பெறு!!
வீதியில் நிற்கும் சமுதாயத்தோரே!
வேடிக்கை பார்க்கும் சமுதாயத்தோரே!
வேடிக்கை பார்த்து பலனில்லை!
வீணே சலித்தும் பலனில்லை!!
வீதியில் இறங்கி போராடாமல்
வேதனைகள் தீராது!!
போராடுவோம்! போராடுவோம்!!
வீரியமாய் போராடுவோம் !!
ஓய மாட்டோம்! உறங்க மாட்டோம்!!
நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!!
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!!
அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!!
இறுதியில் TNTJ மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ ஹாஜா நூஹு அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார், இந்த பொய் வழக்கை திரும்ப பெறவேண்டும் என்றும், இல்லையென்றால் மாவட்டம் தழுவிய போராட்டம் நடைபெரும் என்ற அரசு மாற்றும் காவல் துறைக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) ஏற்பாடு செய்த இந்த கண்டன ஆர்பாட்டத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து அநீதிக்கு எதிராக வேற்றுமையை மறந்து கடையநல்லூரில் உள்ள அனைத்து முஸ்லிம் ஜமாத்தகளும், இன்னபிற அமைப்புகளும் (போலி ஒற்றுமைவாதிகளை தவிர) ஒன்றிணைந்து ஆண்கள், பெண்கள் என்று எல்லா தரப்பினரும் அதிகமான அளவு கலந்து கொண்டு இந்த போராட்ட களத்தை வெற்றியாக்கி தந்தனர். தமிழகத்தில் வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களை காவல் துறை அச்சுறுத்துவது பற்றி அரசியல் மற்றும் சமுக அமைப்புகள் கவலை கொண்டுள்ள இந்த தருணத்தில், தமிழகத்தில் அதிலும் கடையநல்லூரில் இதற்கு எதிராக முதன் முதலில் பாதிக்கபட்டோருக்கு ஆதரவாக த த ஜமாத்தால் எல்லா முஸ்லிம் ஜாமாத் மாற்றும் அமைப்புகளையும் ஒன்றிணைத்து கண்டன ஆர்பாட்டம் ஏற்பாடு செய்து நடைபெற்று இருப்பது எல்லோரின் கவனத்தை திருப்பி உள்ளது.
மேலும் கூட்டத்தில் அதிகமான பத்திரிகை மற்றும் தொலைகாட்சி செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க வந்து செய்திகளை சேகரித்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் (TNTJ) கீழ் முஸ்லிம் ஜாமாத்கள் மாற்றும் அமைப்புகளும் கலந்து கொண்ட அநீதிக்கு எதிராக நடந்த இந்த ஆர்ப்பாட்டம் கடையநல்லூர் வரலாற்றில் ஒரு மைல் கல் என்று கூறலாம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒற்றுமைக்கு எதிரானது என்ற பொய்யான துவேச கருத்து தூள் தூளாக்கபட்டு, TNTJ சமுதயா ஒற்றுமையை என்றும் விரும்ப கூடியது என்பது பறைசாற்றபட்டது. இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியை த த ஜ சார்பாக தெரிவித்து கொண்டது, இந்த ஆர்பாட்டத்தில் மேலும் வழக்கத்திற்கு மாறாக அதிகமான ஆண் மற்றும் பெண் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும், TNTJ தொண்டர் அணியினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
No comments:
Post a Comment