23.12.2012 அன்று டவுண் கிளை அய்யாபுரம் மர்கஸில் வைத்து அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர் சகோ சிராஜ் அவர்கள் முன்னிலையில் கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
01. அனைத்து கிளைகளுக்கும் பொதுவான பெண்கள் அரபி கல்லூரி அமீரக வாழ் கொள்கை சகோதரர்கள் மூலமாக நடத்துவது சம்பந்தமாக,
02. அமீரக வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் பண உதவியுடன் கடையநல்லூர்லில் ''பைத்துல் மால்'' என்ற வட்டி இல்லா கடன் உதவி திட்டம் விரைவில் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் அதன் செயல் திட்டங்கள் குறித்து அலோசிக்கப்பட்டது
03. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01.01.2013 அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ''தர்பியா'' என்னும் நல்லொக்கப் பயிற்சி முகாம் டவுண் கிளை மர்கஸில் வைத்து நடத்துவது அதற்க்கு அனைத்து கிளை சார்பாக ஒத்துழைப்பு நல்குவது குறித்து பேசப்பட்டது.
04. கடந்த 22.12.2012 அன்று சென்னையில் நடைபெற்ற காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்தின் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்க்கு எதிராக காவல் துறை காவி கூட்டம் நடத்திய வன்முறை செயலை கடையநல்லூர் கிளை கண்டிப்பதுடன் அனைத்து கிளை சார்பாக விரைவில் கண்டன போஸ்டர் அடித்து ஒட்டுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது
05. கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் சார்பாக கடந்த 14-12-12 அன்று தமிழக அரசின் தொடர் மின்வெட்டை கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்ட செலவினங்கள் சமர்பிக்கப்பட்டது.
இறுதியில் தூவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment