கடந்த வெள்ளிக்கிழமை (28-12-12) அன்று தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோ. M.I சுலைமான் தலைமையில் நடைபெற்ற இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி த. த. ஜ. ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்து இனிதே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி முடிவுற்ற பின் நமது ஜித்தா வாழ் கடையநல்லூர் கூட்டமைப்பு சகோதரர்கள், சகோ. M.I சுலைமான் தலைமையில் நமது ஊரில் அமையவிருக்கும் டவுன் கிளை மற்றும் பேட்டை கிளை மார்கஸ் விசயமாக கலந்து ஆலோசித்தனர். சகோ. M.I சுலைமான் அவர்கள் அதற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கினார்கள். மேலும் கடையநல்லூரில் கடந்த காலம் நடைபெற்ற விசயங்களை பற்றியும், இனி எப்படி மார்க்க பணிகளை மேற்க்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அழகான முறையில் ஒரு சிற்றுரை நிகழ்த்தினார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜித்தா மண்டல தலைவர் சகோ முனாப் மற்றும் ஜித்தா மண்டல செயலாளர் சகோ அப்துல் பாரி அவர்களும் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். துவாவிற்க்கு பின் ஆலோசனை கூட்டம் இனிதே நிறைவுபெற்றது .
No comments:
Post a Comment