கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 12, 2013

பேட்டை கிளை சார்பில் மருத்துவ உதவி!

        தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை அல்லாஹ்வின் பொறுத்தம் நாடி செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பேட்டை அரபி லாட்ஜ்யில் தங்கி உள்ள முஹம்மது அலி என்ற சகோதரர்க்கு நீர் பையில் ஆபரேஷன் செய்ய வோண்டிய
இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார் சரியான நேரத்தில் ஆபரேஷன் செய்ய முடியாவிட்டால் ஊயிர்க்கு ஆபத்து என்று டாக்டர்கள் கூறி உள்ள நிலையில் அன்றாட செலவினங்களுக்கு கூட வழி இல்லாத அந்த குடும்பத்துக்கு பேட்டை கிளை சார்பாக முதல் தவணையாக 09.01.2013 அன்று முஹம்மது அலி என்ற அந்த சகோதரரின் மனைவியிடம் 3000 ரூபாய் பணத்தை சகோதரர் அமீன் வழங்கினார்.

இது போன்ற உதவிகள் வேண்டி தினந்தோறும் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளது. எனவே இவைகளை நிறைவேற்ற தங்களுடைய உதவிகள் மற்றும் ஜகாத் நிதியை அனுப்பி தருமாறும் நிர்வாகம் உங்களை கேட்டு கொள்கிறது.

 எவரொருவர் ஓர் ஆத்மாவை  வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (5:32)

No comments: