கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 30, 2013

த த ஜமாஅத் சார்பாக ரயில்வே மேலாளரிடம் கோரிக்கை மனு!

கடையநல்லூரில் பொதிகை எக்ஸ்பிரஸ் முதலாவது நடை மேடைக்கு வந்து செல்ல வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை மனு.

         கடையநல்லூரில் இருந்து தினம்தோறும் சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நூற்றுக்கணக்கான்னோர் பயணிக்கின்றனர், ஆனால் கடையநல்லூர் ரெயில் நிலையத்தில் கழிப்பறை உட்பட எந்தவித அடிப்படை வாசதிகளும் இல்லை, மேலும் கடையநல்லூர் ரெயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடை இல்லாத காரணத்தால்



ரெயிலில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வயதான முதியோர்கள் மற்றும் பயணிகளுக்கு சிரம்மமாக இருப்பதால் இரண்டாவது நடைமேடை உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
         அதுவரை, சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் முதலாவது நடைமேடைக்கு வந்து செல்ல உத்தரவுயிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், மக்கள் சக்தி இயக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுமக்களை ஒன்று திரட்டி கடையநல்லூர் ரெயில் நிலையத்தை விரைவில் முற்றுகையிடுவோம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் கூறப்பட்டிரிந்தது. 
        அந்த  மனுவை 29-1-13 அன்று தென்காசி வருகை தந்த மதுரை ரெயில்வே கோட்ட மேலாளரிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்த நிர்வாகிகள் அளித்தனர். 

No comments: